''கலாகத்ர்''
பாகிஸ்தானின் பெஷாவரை சேர்ந்த தாவூத் இப்ராகிம் (15), ராணுவப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் படிக்கும் பள்ளியில் நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் நடந்தது.
அதற்கு முந்தைய தின இரவில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாவூத், மிகவும் தாமதமாக தூங்கச் சென்றான். அதற்கு முன்பாக, காலையில் சரியான நேரத்தில் எழுவதற்கு, கடிகாரத்தில் அவன் அலாரத்தை வைத்துக் கொண்டான். கடிகாரம் அன்றைக்கு வேலை செய்யவில்லை. இதனால், அலாரம் அடிக்காததால், தாவூத் அசந்து தூங்கி விட்டான். அவனை யாரும் எழுப்பாததால், பள்ளிக்கும் செல்லவில்லை.
இந்நிலையில், அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு, அவனுடைய பள்ளிக்குள் புகுந்த ஆயுததாரிகள்132 குழந்தைகள் உட்பட 141 பேரை கொன்று குவித்தனர்.பெரிய மாணவர்களை கொல்ல வேண்டும் என ஆயுததாரிகளுக்கு கட்டளையிடப்பட்டு இருந்தது. தாக்குதலில், அவனது வகுப்பில் படிக்கும் அனைவரும் உயிரிழந்தனர். அன்றைய தினத்தில், பள்ளிக்கு செல்லாததால் அவனுடைய 9ம் வகுப்பில், தாவூத் மட்டுமே உயிர் தப்பியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment