எதிர்காலத்தில் மகிந்த + சந்திரிக்கா ஆலோசனைகளை கேட்டு செயற்படவிருக்கிறேன் - ரணில்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் 19-12-2014 வெளியாகியது. விஹாரமஹா தேவி பூங்காவில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
நல்லாட்சி மற்றும் நிலையான நாடு என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை உறுதிபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல், நாட்டை முன்னேற்றும் பொருளாதாரம், ஒழுக்கமான சமுகம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட 11 விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்போது உரையாற்றிய ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஆலோசனைகளை கேட்டு, அதன் அடிப்படையிலேயே செயற்படவிருப்பதாக, தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டதுடன், மைத்திரிபால சிறிசேனின் பணி நிறைவடைந்துவிடாது. நாட்டில் முழுமையான ஜனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
யுத்த வெற்றியின் போது ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமை வகித்தார். அதற்காக அவரை மதிக்கிறோம்.
அதேநேரம் யுத்தத்தில் ஈடுபட்ட படையினருக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவுக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட வேண்டும். யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment