Header Ads



உலகிலேயே வர்த்தக நடவடிக்கைக்கு, சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 89ஆவது இடம்

(tm)

உலகிலேயே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடிய நாடுகளில் தகுதியான நாடுகளின் 2014ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 89ஆவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.

Forbes எனும் சஞ்சிகையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. 146 நாடுகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பிலேயே இலங்கை 89ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

Forbesஎனும் சஞ்சிகையின் தகவலின் பிரகாரம் முதலாவது இடத்தை டென்மார்க்கும் கடைசி இடத்தை கின்யாவும் பெற்றுக்கொண்டுள்ளன. இந்தியா 93ஆம் இடத்தையும் சீனா 97ஆவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன.

வரி, சொத்துரிமை, புதிய உற்பத்தி, தொழில்நுட்பம், மோசடி, சுதந்திரம், முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட 11 காரணங்களை அடிப்படையாக கொண்டே இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டதாக அந்த சஞ்சிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.