Header Ads



மஹிந்த தலைமையில் 27 பிரதான கூட்டங்கள், 14 ஆயிரத்து 200 மக்கள் சந்திப்புகள்

ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பொது வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 27 பிரதான பிரசார கூட்டங்களை நடத்தவிருப்பதாக அமைச்சர் டலஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து நாளை (09) முதல் பிரசார வேலைகளில் மும்முரமாக களமிறங்க விருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அழஹப்பெரும, பிரதான கூட்டங்களுக்கு மேலதிகமாக ஜனாதிபதியவர்கள் 200 மக்கள் சந்திப்புகளை நடத்துவாரெனவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சர் டளஸ் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இது தொடர்பில் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வீடுதோறும் மூன்று தரங்கள் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு தீர்மானித்திருப் பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி டிசம்பர் 12,13,14 ஆகிய திகதிகளில் முதலாம் கட்டமும் 27,28 ஆகிய திகதிகளில் இரண்டாம் கட்டமும் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் தேர்தல் தொகுதிகளில் 160 பிரதான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. நாடு முழுவதும் நிறுவப்படவுள்ள சுமார் 12 ஆயிரத்து இரண்டு வாக்கெடுப்பு நிலையங்களையும் மையப்படுத்தி பிரசார கூட்டங்களை கூட்டமைப்பு முன்னெடுக்கும்.

மேலும் கிராமபுறங்களில் 14 ஆயிரத்து 200 மக்கள் சந்திப்புகள் நடத்தப்படுமெனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.

No comments

Powered by Blogger.