Header Ads



ஜனாதிபதி தேர்தலில் 2 முஸ்லிம்களும் போட்டி, கட்டுப்பணமும் செலுத்தினர்

-அஷ்ரப் ஏ சமத்-

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.   

ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன, ஒக்கொம ரஜவரு கட்சியின் சார்பில் எம்.பீ.தெமினிமுல்லே, சமாஜவாதி சமனதா கட்சியின் சார்பில் பானி விஜேசிங்க ,எக்சத் சமாஜவாதி கட்சியின் சார்பில் விஜேசிங்க சிறிதுங்கவும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ராஜபக்ஷ பர்ஸி மஹேந்திரவும் , ஐக்கிய மக்கள் மகாசபா கட்சியின் சார்பில் கலாநிதி நாத் அமரநாத்தும் , இலங்கை தேசிய முன்னணியின் சார்பில் விமல் கீகனகே ,புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பள்ளேவத்தே கமராலகே மைத்திரிபால, சுயேட்சையாக ஐ.எம். இல்யாஸ், அரசியல் கட்சியொன்றின் பெயரில்  மௌலவி மிப்லாஹ்ர் ஆகியோரே இத்தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.   இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர். இந்த தேர்தலுக்காக 5 ஆம் திகதி வரை மட்டுமே கட்டுப்பணம் செலுத்த முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது - 

1 comment:

  1. There will be around 20,000 Muslim votes to be wasted for those Muslim Presidents

    ReplyDelete

Powered by Blogger.