தற்போதைய ஆட்சி கீழே விழும் வரை காத்திருக்காது, நாமே கீழே விழுத்த வேண்டும் - ஹரிசன் Mp
(JM.Hafeez)
சாதாரண நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்தி ஆட்சிப் பொறுப்பை வெற்றிலைத் தட்டம் ஒன்றில் வைத்து இலகுவாக எதிர்கட்சினரிடம் கையளிக்க தற்போதைய ஆட்சி பீடம் ஆயத்தமாக இருக்க முடியாது. தற்போதைய ஆட்சி கீழே விழும் வரை காத்திருக்காது நாமே கீழே விழுத்த வேண்டும் என்று அனுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் பீ. ஹரிசன் தெரிவித்தார்.(2.11.2014)
கண்டியில் இடம் பெற்ற ஐ.தே.க.ன் செங்கடகல தொகுதி புனரமைப்புக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவி;தத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊவாவில் நடந்த சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.
தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் கண் மூடித்தனமாக எல்லாப் பொருட்களையும் வழங்கினார்கள். கைக்கடிகாரமா, கைத் தொலைபேசியா, உணவுப் பொதிகளா, சேர்ட்களா, சாரியா, வேட்டியா என்ற ஒரு பேதமும் இன்றி அவை வாரி வழங்கப்பட்டன. அவரவருக்கு பொருத்தமாக அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. புதிதாக வழங்க ஒன்று மில்லை. போதாமைக்கு வித்தியாசமான பொருள் எதனையாவது வழங்கி மனதை வெல்ல வேண்டும் என நினைத்தார்கள். அதன்படி உள்ளாடைகளும் வழங்கப்படன. ஆனால் அவ்வாறான பொதி ஒன்று தவறி மதகுரு ஒருவரையும் சென்றடைந்து விட்டது. இந்த மார்புக் கச்சைக்கு யார் உடல் அளவு எடுத்தார்களோ தெரியாது.
இலங்கையின் மொத்த வருமானத்தில் 47 சதவீம் ஒரு குடும்பத்திற்கும் மிகுதி 57 வீதம் ஏனைய சகல அமைச்சர்களுக்கும் பகிரப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற 60 பேருக்கமாகப் பகிரப்பட்டுள்ளதும் இதில் அடங்கும. நாட்டின் தலைவருக்கு கடந்த வருடம் 860 கோடியும் இவ்வருடம் 960 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பங்கீடுகளில் சமநிலைத் தன்மை கிடையாது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் 27 கட்சிகளின் கூட்டே போட்டியிட்டது. ஆனால் ஹரின் பெர்னான்டோவின் தலைமையில் ஐ.தே.க. தனியே போட்டி இட்டு 7000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே எதிர்காலத்தில் சகல எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து நாம் வெற்றி பெறுவோம்.
ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது எதுவித பேதமும் இல்லை. ரனில், சஜித், கரு, ரவி, என்று பிரிவுகள் எதுவும் கிடையாது. எமக்கு அமைச்சர் பதவிகள் தேவையாயின் இவ்வாறு அலையத் தேவையில்லை. இலகுவாக அரசு பக்கம் சென்று அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து மக்கள் வெற்றியாக நாம் வெற்றியடைந்து கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெறவே விரும்புகிறோம்.
அடுத்த ஏப்பரலில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஐ.தே.க. ன் ஆட்சியில் கொண்டாட முடியும் என்பதனைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஐ.தே.க.யின் 12000 பேரைக் கொண்ட வாக்களிப்பு நிலைய அணிகள் தயாரிகி உள்ளன என்றார்.
Post a Comment