ரவூப் ஹக்கீமின் புதுக்கதை...!
(நஜீப் பின் கபூர்)
ஆற்றைக் கடக்க அழைப்பு
இந்தக் கதை ஒரு
அண்ணண் தம்பி விளையாட்ட!
நாம் இனிப் பதவிகளுக்கு ஆசைப்படாமல் முஸ்லிம்களின் நலன்களை மையமாகக் கொண்டே எதிர்வரும் காலங்களில் தீர்மானங்களை எடுப்போம் - நடப்போம், என்று மு.கா. தலைவர் புதுக் கதையொன்றை தற்போது பேசிவருகின்றார்.
இறுதிவரை பதவிகளுக்கு பின்னால் ஓடித் திரிந்து விட்டு, முஸ்லிம்களுக்கு தொந்தரவுகளைத் துன்பங்களை ஆளும் தரப்புக் கையாட்கள் செய்து வந்த நேரத்தில் ஊமைப் பாத்திரத்தில் நாடகமாடி, இறுதிக் கட்டம் வரை அரியாசனையில் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு இப்போது மட்டும் பதவிகளுக்கு ஆசைப்பட மாட்டோம் என்று மு.கா. ஏன் பேசுகின்றது என்பதனை இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
தானும் கட்சியும் சமூகத்தின் கோபப் பார்வையில் சிக்கி இருப்பது தலைவருக்கு இப்போது புரிகின்றது. இதிலிருந்து தப்பிக் கொண்டு அதன் மூலம் முஸ்லிம் வாக்குகளை மீண்டும் கொள்ளையடித்து அமைச்சுப் பதவிகளைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்ச்சியிலேயே இப்போது மு.கா. தலைவர் இறங்கி இருக்கின்றார். என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இதே கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடைசி நேரத்திலும் பிரதி அமைச்சுப் பதவிக்காக ஆசைப்பட்டுக் கொண்டும் அது பற்றி கதைகளை தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருவது பகிரங்க இரகசியம்.
அடுத்து மு.கா.தலைவரின் கட்டுப் பாட்டடில் இன்று அவரது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. எனவே பதவி பட்டங்களுக்கு இனியும் ஆசைப்பட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை தலைவரால் கொடுக்க முடியாது என்பது எமது வாதம். எனவேதானே தலைவருக்குத் தெரியாமல் பெரியவரிடத்தில் போய் பசீர் அமைச்சுப் பதவி பெற்று வந்தார்.
இதற்கு தலைவரால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது. ஓரிரு அரசியல் கூட்டத்தில் சம்பிரதாயத்திற்காக திட்டுவதைத் தவிர, பசீர் விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை தலைவரால் ஒரு போதும் எடுக்க முடியாது! அப்படி இருக்கும் போது என்ன இப்போது மட்டும் பதவிக்கு ஆசைப்பட மாட்டோம் என்று உறுதிமொழி வேறு கொடுக்கின்றார்களே இவர்கள்.? இது வேடிக்கையாகத் தெரியவில்லையா?
இதன் பின்னர் பதவிகளுக்கு ஆசைப்பட மாட்டோம் என்று வாக்குமூலம் கொடுப்பதிலிருந்து இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இதுவரை நாம் பதவி பட்டங்களுக்காக ஓடித் திரிந்தோம் என்பதனைத்தானே இவர்கள் சொல்ல வருகின்றார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிகின்றது.
இவர்களிடம் நாம் கேட்பது அப்படியானால் இது வரையும் முஸ்லிம்களின் நலன்களில் நீங்கள் மண்ணை வாறிப் பேட்டுத்ததானே இந்தப் பயணத்தைப்போய் இருக்கின்றீர்கள். இனியும் அப்படிச் செய்யமாட்டும் என்று நீங்கள் கூறினால் அதனை முஸ்லிம்கள் அப்படியே நம்பிக் கொண்டு-ஏற்றுக் கொண்டு அடுத்த தேர்தலில் உங்களுக்கு வாக்களித்து உங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
என்ன இது ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி பயணத்திற் மீண்டும் முஸ்லிம்களுக்கு அழைப்பா? இனியும் தப்புப் பண்ண மாட்டோம் என்ற கதை எனக் கேட்கத் தோன்றுகின்றது. இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் மாங்காய் மடையர்களாக இனியும் வாழ்ந்தே தீருவது என்று முடிவெடுத்தால் உங்கள் விருப்பங்களும் நடந்தேரவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது.
எமது உரிமைகள் மறுக்கப்படுகின்றது அரசு இதுவரை எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறை செய்யவில்லை என்று கடைசி மூச்சுவாங்குகின்ற இந்த நேரத்தில் மு.கா.முக்கிஸ்தர்கள் சமூகத்தின் முன் வந்து இப்போது ஒப்பாரி வைப்பது எதற்காக?
உரிமைகளை வென்றெடுக்க நாடாளுமன்றம் போக வாக்குக் கேட்டீர்களே இப்போது ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வந்து கடைசிக் கட்டத்தில் கைவிரிக்கின்றீர்களே.....! இனியும் எப்படி சமூகம் உங்களை நம்புவது.?
உவா மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம்களின் புறக்கணிப்பின் பயம் பீதி இவர்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது, தேர்தல் காலங்களில் இவர்கள் இதுபோன்ற பொய்களை அள்ளி வீசுவது வழமைதான் அதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால். பதவிகள் தேவையில்லை முஸ்லிம்களின் நலனுக்காகவே செயற்படப்போகின்றதாக சொல்லி இருக்கும் பாரியதொரு பொய்யை நீங்கள் பரிசோதித்துப்பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. இது பொய்யாகவே கருதப்படவேண்டியது. இன்னுமொரு முறை இவர்களின் பொய்யை பரிசீலித்துப்பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.
ReplyDeleteஉங்கள் கூற்று அனைத்தும் , உண்மைக்குப் புறம்பானது, & இது இதய சுத்தியுடன் நோக்கப்படவுமில்லை..., எழுதப்பட்வுமில்லை
ReplyDelete