Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் மு.கா. என்ன செய்யும்...? ஹக்கீம் எப்படி நடந்து கொள்ளப்போகின்றார்..??

(நஜீப் பின் கபூர்)

நாம் கடந்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கொடுத்த ஒரு செய்தி முஸ்லிம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மக்கா சென்றிருந்த மு.கா.தலைவருக்கு அந்த செய்தி கொடுத்த அதிர்ச்சியால் அவர் இந்தச் செய்திக்கு வேறு விளக்கங்களை மக்கா நகரிலிருந்தே  கொடுக்க வேண்டியும் வந்தது. 

மக்காவிலிருந்து அவர் கொடுத்த விளக்கத்துடன் நிற்காது  நாடு திரும்பி கிழக்கிற்குச் சென்றும் அந்த செய்திபற்றி மேலதிக  விளக்கம் வேறு கொடுக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது. மீண்டும் நாம் தெளிவாகக் சொல்கின்றோம் நாம் கற்பனை பண்ணி அந்த செய்தியைக் கொடுக்கவில்லை ஆதாரங்களைக் கையில் வைத்துக் கொண்டே அந்தச் செய்தியைக் கொடுத்தோம். 

மு.கா.அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த செய்தி ஒரு புறம் இருக்க இப்போது ஒரு புதுத் கதையையும் நாம் மு.கா.போராளிகளுக்கும் ஆதரவாலர்களுக்கும் முன் கூட்டியே கொடுக்கலாம் என்று இப்போது எண்ணுகின்றோம். 

இது எவர் மீது வஞ்சம் தீர்க்கும் நோக்கடன் கொடுக்கப்படுகின்ற செய்தியே கண்டுபிடிப்போ அல்ல. இது யாதார்த்தம் என்பதனை எதிர்வரும் நாட்களில் இந்து நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். 

ஜனாதிபதித் தேர்தலில்; மு.கா. என்ன செய்யும்?  ஹக்கீம் எப்படி நடந்து கொள்ளப் போகின்றார்? 

என்ற செய்தி முஸ்லிம்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டாலும் அந்த விவகாரத்தில் எந்த பரபரப்போ ஆர்வமே கட்டவேண்டிய அவசியம் எவருக்கும் தேவையில்லை என்பது எமது கருத்து. இந்த விடயத்தில் எந்த சஸ்பென்சும் கிடையாது.

நிகழப் போவதும் நிகழ்ந்திருப்பதும் இதுதான்.! 

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தாவுக்கு எதிரான பிரதான வேட்பாளர் ரணில்தான் என்பது தற்போது பெரும்பாலும் உறுதியாகி இருக்கின்றது. பொது வேட்பாளர் என்ற பேச்சக்கு ரணில் இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ரணிலுக்கு எந்தவகையிலும் இந்தத் தேர்தலில் ராஜபக்சாவுடன் தாக்குப் பிடிக்க முடியாது. 

ரணில் முதல் சுற்று முதல் ரவுண்டிலேயே நொக்கவுட் என்பது நாம் செல்வது போல் ரவூப் ஹக்கீமுக்கும் தெரியும். அந்தவகையில் வலுவான ராஜபக்சவை ஹக்கீம் ஆதரிப்பது தன்னலத்துக்கான செயல்பாடாக  இருந்தாலும்,  சமூக நலனுக்கான முடிவு என்ற பேரில் வரப்போகும் மு.கா. முடிவில் எமக்கும் உடன் பாடு இருக்கின்றது.

ஆனால் இந்த மஹிந்தவை ஆதரிப்பது என்ற தனிப்பட்ட விருப்புக்கு நிகழ்ச்சி நிரலுக்கு சமூக நலன் என்ற முத்திரையை பதிக்கப்போகும் இடத்தில் தலைவருக்கு சிக்கல் ஒன்று ஏற்படும். முஸ்லிம்களுக்கு எதிரான கடந்த கால நெருக்கடிகளின் போது ஆளும் தரப்பு நடந்து கொண்ட முறையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் கெட்டுப்போய் இருக்கின்றது. 

தனித்துவத் தலைவருக்கு இது நன்றாகத் தெரியும். என்றாலும் தோற்றுப் போகின்ற ரணிலை ஆதரித்து அவமானப்பட்டுக் கொள்வதை விட கட்சிக்குள்ளும் சமூகத்தின் மத்தியிலும் எப்படி  மஹிந்த ஆதர என்ற தனது நிலைப்பாட்டைச் சந்தைப்படுத்துவதில் தான் தலைவருக்கு நெருக்கடி இருக்கின்றது.

மு.கா.வினதும் தலைவரினதும் இமேஜ் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நன்றாகக் கொட்டுப்போய் இருப்பதால் தயக்கத்துடன் தான் இதனைக் கள்ளக் கடத்தல் பொருளை சந்தைப்படுத்தவது போல்  மஹிந்த ஆதரவு விவாகாரத்தை கையாள வேண்டி இருக்கின்றது. 

ஊடக்காரர்களை ஆள்வைத்துத் தட்டுவது போல்?  ஏற்கெனவே தீர்மானித்த விவகாரத்தை  தானாக எடுக்காது அதற்கு ஆள்வைத்துக் கட்சித் தீர்மானம் என்ற பேரில் பிறப்புச்சான்றிதல் வழங்கும் உத்தியை ஜனாதிபதித் தேர்தலில் தலைவர் கையாள வேண்டி இருக்கும்- இருக்கின்றது. இதற்கு வேறு....! 

சரியான நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு என்றெல்லாம் வார்த்தைகளைச் சேர்த்து தத்துவம் வேறு பேசுவார்கள்.

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதான் பொது வேட்பாளர் என்று உறுதியானால் நிச்சயமாக மு.கா.தலைவர் அவரை துணிந்து ஆதரிக்க இடமிருக்கின்றது. நாடே எதிர்பார்ப்பது போல் வலுவான ராஜபக்சவுடன் மோதக்கூடிய ஒரே ஆள் சந்திரிக்கா மட்டும் தான். இது விடயதிலும் ஹக்கீமின் நிலைப்பாடு யதார்த்தமானது.

ராஜபக்ச ஆதரவுக்கு கட்சி முடிவு என்ற முத்திரை குத்தும் பணிதான் தற்போது மு.கா.இந்தத் தேர்தலில் செய்ய எஞ்சி இருக்கும் ஒரே பணி என்பதனை நாம் பொறுப்படன் முஸ்லிம் சமூகத்திற்கு அறியத் தருகின்றோம். எல்லாம் முடிவுகளும் எடுக்கப்பட்டாயிற்று. அறிவிப்பதில்தான் அவர்களுக்கு அச்சம்-பயம் எனவே தீர்மானம் எடுக்க வில்லை என்பது எல்லாம் வெறும் அரசியல் விளையாட்டுக்கள். பொறுத்திருந்து பாருங்கள் நமது கதையின் நம்பகத் தன்மையை.! 

கடந்த இரு தேர்தல்களிலும் ஆதரிக்கின்றோம்..! ஆதரிக்கின்றோம்..! என்று ராஜபக்சவிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு யானையின் முதுகில் ஏறியவர்கள் பதவிகளுக்காக மட்டும் ராஜபக்சாவிடம் போய் கை நீட்டி நிற்கின்ற வேலையை இந்த முறையும் தலைவரால் செய்ய முடியாது.

ராஜபக்சாவுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியம்! 
ரவூப் ஹக்கீமுக்குப் பொதுத் தேர்தல் முக்கியம்! 
என்ற அடுத்த தொடரை வாசகர்கள் விரைவில் எதிர் பார்க்கவும். நன்றி   

1 comment:

  1. ரஊப் ஹகீமின் அரசியல் நாடகத்திற்கு
    சூபர் டயலக்பா!

    ReplyDelete

Powered by Blogger.