சிரானி பண்டாரநாயக்கவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை
-Gtn-
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை ஜனாதிபதி தேர்தல் போட்டியிடுமாறு மாதுளவாவே சோபித தேரரின் நீதீயான சமூகத்திற்கான இயக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வேறுசில கட்சிகளும் அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.நிறைவேற்று அதிகார நீக்குவது தொடர்பாகவே அவரிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில்விக்கிரமசிங்க ஆகியோருடன் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளராகவே அவரை போட்டியிடுமாறு கட்சிகள் கோரியுள்ளன.
இதேவேளை எதிர்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்கவிற்க்கும் மாதுளவாவே தேரரிற்க்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்க்கு ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் முயல்வதாகவும் தெரியவருகின்றது. எனினும் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதை தேரர் கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவளை பொருத்தமான பொதுவேட்பாளர் ஒருவரை இனம்கண்டால் தான் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக தயார் என ரணில்விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் மத்தியில் இன்னமும் நிச்சயமற்ற நிலையே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment