குறைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகளை அள்ளிக்கொடுக்கும் பேஸ்புக்..!
சமுக வலைதளமான பேஸ்புக் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தளத்தில் குறைகள் அல்லது தவறுகள் ஏதேனும் இருப்பின், அதனை கண்டுப்பிடிப்பவர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசு தொகையை வழங்கி வரும் நிலையில், தற்போது இத்தொகையை பேஸ்புக் இரட்டிப்பாக்கியுள்ளது. பரிசுத் தொகை அதிகரித்திருக்கும் நிலையில், போட்டியும் அதிகரித்து வருகிறது. கூகிள் நிறுவனத்திற்கு போட்டியாக இணையத்தில் விளம்பரத்தின் மூலம் வியாபரத்தை பெருக்க பேஸ்புக் நிறுவனம் ஒரு சாப்ட்வேரை தயாரித்துள்ளது. இதில் உள்ள பிரச்சனைகளை கண்டறிய பேஸ்புக் நிறுவனம் வெயிட் ஹேக்கர்களை நாடியுள்ளது. பொதுவாக இணையதளத்தில் ஓட்டைகளை கண்டுப்பிடிப்பவர்கள் அனைவரும் ஹேக்கர்களாக தான் இருப்பார்கள். ஹோக்கிங் என்பது இந்தியாவில் ஒரு தவறான செயலாகவே பார்க்கப்படும் நிலையில், அது பற்றிய ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
வெயிட் ஹேட்ஸ் இதுக்குறித்து பேஸ்புக் அதிகாரிகள் கூறுகையில் எங்கள் தளத்தை சிறந்த பணியாளர்களை கொண்டு மிகவும் சிறப்பான மற்றும் பாதுகாப்புடன் வடிவமைத்துள்ளோம். இதனால் வெயிட் ஹேட்ஸ் மூலம் நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்துள்ளோம் என்பதை தெரிந்துக்கொள்ளவே இந்த பரிசு தொகை என்று கூறினார்கள்.
வெயிட் ஹேட்ஸ் என்றால் என்ன?
ஹேக்கிங் செய்பவர்களில் இரண்டு வகையினர்கள் உள்ளனர். பிளாக் ஹேட்ஸ் மற்றும் வெயிட் ஹேட்ஸ். இதில் பிளாக் ஹேட்ஸ் சட்டம் மற்றும் சமுக விரோதமான செயல்களில் ஈடுப்படுபவர்கள் உதரணமாக இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடுபவர்கள். வெயிட் ஹேட்ஸ் எனப்படுவர்கள் இணையதளத்தில் இருக்கும் ஒட்டைகள் கண்டுப்பிடிப்பது, பிளாக் ஹேட்ஸ் வேலைகளை தடுப்பது போன்றவற்றை செய்பவர்கள் வெயிட் ஹேட்ஸ்.
நீங்கள் குறைகள் ஏதேனும் கண்டுப்பிடித்துவிட்டாலோ, அல்லது இது குறித்த இதர விபரங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்: https://www.facebook.com/whitehat/account
Post a Comment