Header Ads



ஹக்கீம் - ஹசன் அலி முறுகலா...?

(ஏ.எச்.எம். பூமுதீன்)

முஸ்லிம் காங்கிரஸி;ன மத்திய குழு வெள்ளிக்கிழமை கூடி தீர்மானித்ததற்கு இணங்க இன்று (02) நடைபெறவுள்ள அம்பாரை மாவட்ட மு.கா மத்திய குழு கூட்டத்திற்கு கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி சமுகமளிக்கமாட்டார் என நம்பகரமாக தெரியவருகின்றது.

முகா தலைவர் ரவுப் ஹக்கீம் - மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க திரைமறைவில் எடுத்துள்ள தீர்மானித்தை அறிந்ததன் பிற்பாடே ஹசன் அலி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. 
முகா தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அம்பாரை மாவட்ட முகா பிரமுகர்கள் பலர் தற்போது அம்பாரை மாவட்டத்தி;ற்கு விஜயம் செய்து கொண்டுள்ள இத்தருணத்தில் செயலாளர் நாயம் ஹசன் அலி எம்பி கடும் ஆத்திரம் மேலோங்கியவராக கொழும்பு – கல்கிஸ்ஸயில் உள்ள அவரது இல்லத்தில் இருப்பதாக அறியமுடிகின்றது.

முகா உயர் பீட கூட்டம் இடம்பெற்ற வேளை கல்முனை கரைரயோர மாவட்டம் மற்றும் அம்பாரை , திருமலை மாவட்டங்களுக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமித்தல் தொடர்பிலான ஆவணங்களை தயார்படுத்தி அதனை அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு அந்த ஆவணத்தில் கையொப்பம் இடுமாறு கேட்டிருந்த போது அதற்கு ஹக்கீம் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் ஹசன் அலி இன்றைய கூட்டதில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தில் ஒன்றாகும்.  

அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஹசன் அலி மிகவும் உறுதியாய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. சந்தோசம். இனிமேல் முஸ்லிம்காங்கிரஸை ஆதரிக்கவேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிம்காங்கிரஸ் இருந்தும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இனிமேலும் அந்த பாதுகாப்பை நாம் எதிர்பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. கொடுக்கவேண்டிய கால அவகாசங்களை ரவுப் ஹக்கீமுக்கு நாம் கொடுத்து விட்டோம். இனிமேல் முஸ்லிம்காங்கிரஸை முஸ்லிம்கள் ஆதரிப்பது படு முட்டாள்தனம்.

    நமது வாக்கை பெற்று அவர்கள் சுகபோகம் அனுபவிக்கின்றார்கள். நம்மைப்பற்றி கவலைப்படாத தலைவர்கள்.

    நாம் யோசித்ததெல்லாம் முஸ்லிம்களுக்குள்ள தலைமைத்துவங்கள் பிளவு படக்கூடாது என்பதைத்தான். ஆனால் இன்னுமொரு விடயம் உள்ளது முஸ்லிம்காங்கிரஸ் ஊடாக நமக்கு உதவி கிடைப்பதைவிட நாம் நேரடியாக வாக்குகளை நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

    இடைத்தரகர்களாக இருக்கு இதுபோன்ற கட்சிகளை நாடி நிற்பதைவிட நாம் விரும்பிய வேறொரு தலையாய கட்சிக்கு நமது வாக்குகளை இடலாம்.

    முஸ்லிம்காங்கிரஸை நம்பி இனி பயனில்லை.

    சரி நாம் சொல்வதை நியாயமில்லை என்று சொலின்றார்களா? அப்படியானால் இதுவரை முஸ்லிம்காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு என்ன செய்துள்ளது என்ற கேள்விக்கு அவர்களின் பதில் என்ன என்ப்தை சொல்லட்டும் அதில் ஏதாவது ஒரு விடயம் சொல்லட்ட்டும் அவர்களை ஆதரிக்கலாம். அன்று முதல் இன்று வரை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றார்களே தவிர மக்களுக்கு ஒன்றும் செய்யவே இல்லை.

    இது நமது எதிர்காலத்தைப்பற்றியும் நமது எதிர்கால சந்ததியினர் பற்றியும் சிந்திக்கவேண்டிய காலம். மக்களே நீங்கள் நன்றாக சிந்தித்து இவர்களை புறக்கணிக்கும் முடிவை எடுங்கள்.

    குறிப்பு: தனிப்பட்ட ரீதியில் எமக்கு எந்த கட்சியுடனோ அல்லது அங்கத்தவர்களுடனோ எமக்கு எதுவித விரோதங்களுமில்லை. மக்கள் சார்பாகவே எமது கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.