Header Ads



பொலிஸ், தேர்தல், அரச அதிகாரிகள் ஜனாதிபதி தேர்தலுக்காக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளனர்

பொலிஸ் சேவையும் அரச அதிகாரிகளும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு தயார்ப்படுத்தல்களுக்காக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸாரின் பணி நாட்டை பாதுகாப்பதே அன்றி அரசாங்கத்தை பாதுகாப்பதல்ல. பொலிஸார் அரசாங்கத்தை பாதுகாப்பதில் தெளிவாக செயற்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் நிகழ்வுகளின் போது அவர்கள் நியாயமாக நடந்து கொள்வதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் அணிமையில் கூட்டம் ஒன்றை நடத்தியது. சில தெருக்களில் அலங்கரிக்க பொலிஸார் அனுமதி மறுத்தனர்.

ஆனால், அரசாங்கம் அப்படியான பொது நிகழ்வுகளை நடத்தும் போது அதனை செய்ய பொலிஸார் அனுமதி வழங்குகின்றனர்.

ஜனாதிபதி அண்மையில் பல பொலிஸ் அதிகாரிகளை சந்தித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் சாத்தியங்கள் காணப்படும் சூழலில் இந்த சந்திப்பு பொலிஸ் சேவையை அரசியல் மயப்படுத்தும் ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் திணைக்களம் மற்றும் அதன் சுதந்திரம் குறித்து கவலைகள் ஏற்பட்டுள்ளன எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸ் சேவை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்களை பிரதமர் டி. எம். ஜயரத்ன மறுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.