Header Ads



''ஜனாதிபதி தேர்தல்'' தீர்மானிப்பது முஸ்லிம் கட்சிகளா..? முஸ்லிம் மக்களா...??

ஏ.எல்.நியாஸ் BA(Hons)sp

எதிர்வரும் 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் எமது நாட்டில் நடத்தப்படவிருக்கின்ற சூழ்நிலையிலும், மிகவும் முக்கியத்துவமான இக்காலகட்டத்திலும் சிறுபான்மைச் சமூகம் யாரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற இக்கட்டான கடப்பாடுடன் இருப்பதனை இன்று இலங்கை உட்பட உலகம் பூராகவும் அதானிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நாட்டின் தற்போதைய ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஸ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள  அதேவேளை எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரா? (சந்திரிக்கா, கரு ஜயசூரிய, சோபித்த தேர், சஜித்) அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவா? போட்டியிடுவார் என்பது இன்னும் புரியாத புதிர்க் கணக்காகவே உள்ளதுடன், இதுவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு தலையிடியான ஒரு விடயமாகவும் உள்ளது. இதனைவிட ஏனைய கட்சிகளும் வேட்பாளர்களைக் களமிறங்கினாலும் கூட அது பாரிய அளவில் செல்வாக்கு எதனையும் இந்த இரு தேசிய கட்சிகளுக்கும் செலுத்தப்போவதுமில்லை.

முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய தேர்தலே இது
அண்மைக் காலமாக சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பேரினவாதிகளால் பாரியளவில் பொருளாதார, சமுக மற்றும் சமய விடயங்களில் பாரிய தாக்குதல்கள் மற்றும் நெருக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் இதன் விளைவு என்ன என்பதனை மக்கள் சிந்தித்து செயற்படாமல் இருக்கப்போவதுமில்லை. குறிப்பாக பொதுபல சேனா, ராவனாபலய,  ஜாதிக ஹெலஉறுமய முதலான பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இச்சூழலில் நடாத்தப்படும் இத்தேர்தல் முஸ்லிம் வாக்காளர்களிடையே மிகவும் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தலாம்.
தம்புள்ளையில் தொடங்கிய  பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் அனுராதபுரம், பேருவளை, அளுத்கம, தர்க்கா டவுன், ராஜகிரிய, தெஹிவளை, மகியங்கணை, மாத்தறை, திருகோணமலை என பல இடங்களில் பள்ளிகள் தாக்கப்பட்டும், சில இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டும் உள்ளது.
முஸ்லிம் பெண்களின் சுதந்திரமான ஆடைகளுக்கே இன்று ஒரு அச்சநிலை தோன்றியுள்ளது. ஹபாயா ஆடை அணிவதனைக் கூட இந்நாட்டில் சில பேரினவாத அமைப்புக்களுக்கு சகிக்க முடியாத நிலை. அத்துடன் இந்நாட்டின் பிரபலமான பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாமிய ஆடைகளைஅணிவதற்கு பல்வேறு சிரமங்கள். பல மாணவர்கள் இந்நாட்டின் தேசிய கல்விற்காக அவர்களது கலாச்சார ஆடைகளை விட்டுக் கொடுக்கக் கூடிய சங்கடமான சூழ்நிலையும் இன்று உருவாகியுள்ளது.
அண்மையில் பேரினவாத அமைப்புக்களினால் தாக்கி அழிக்கப்பட்ட மத ஸ்தலங்கள் மற்றும் பொருளாதாரங்களின் வடுக்கள் இன்னும் மக்கள் மத்தியில் அழியாத இடம்பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக களுத்துறை, பேருவளை, தர்கா டவுண், அளுத்கம முஸ்லிம்கள் இலகுவில் மறந்துவிடவுமில்லை.
சவுதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் கட்டிமுடிக்கப்பட்ட சுனாமி  வீடமைப்புத்திட்டம் இதுவரையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகின்றமை.
வடக்கிலும் கிழக்கிலும் தேர்தல் நடாத்தப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதாக அரசாங்கம் மார்தட்டிப் பேசினாலும் கூட அதன் இரண்டு மாகாணங்களிலும் ஆளுநராக ஓய்வு பெற்ற படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சிவில் நிர்வாக நடடிக்கைக்கு தடையாக  இருக்கின்றமை.
அ;பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்தும் கூட இம்மாவட்டத்தின் அரசாங்க அதிபர்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரகள் நியமிக்கப்பட்டதனால் சிறுபான்மை மக்களின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாரிய தடையாக இருக்கின்றமையினை மக்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் அறியாமலுமில்லை. 
திகாமடுல்ல மாவட்டத்தின் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர மாவட்டக் கோரிக்கை இதுரையில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை.
கல்முனைப் பிரதேசத்தில் 99மூ மான தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேச செயலகத்திற்கு பெரும்பான்மை சிங்கள சிவில் நிர்வாக சேவை அதிகாரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டமையினால் மக்கள் அரசாங்கத்தின் மீதான் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற நிலைமை தோன்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்ற போர்வையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தனது சுய நினைவு ஆட்சியை மேற்கொள்ளும் சூழல்.
இவை தவிர சிறுபான்மை மக்களின் காணி சுவிகரிப்பு, வேலை வாய்ப்பில் பாரபட்சம், பட்டதாரி நியமனங்களில் அரச தலையீடு, நாட்டில் வறிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படாமை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன இன்றைய சுழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்தப் கூடிய ஒரு முக்கிய கருப்பொருளாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

முஸ்லிம் கட்சிகளின் நிலை

இக்கட்சி தேசிய தேர்தல்களுக்கு பாரிய செல்வாக்கினைச் செலுத்துவதில்லை என்பது மக்களிடத்தே புரிந்த கதையாகத்தான் இருக்கிறது. இக்கட்சி கொண்டுள்ள தேசிய வாக்குகள் 30000 ஐ விடவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இது வரையில் இக்கட்சி தனது சொந்த  குதிரைச் சின்னத்தில் அக்கரைப்பற்று மாநகர, பிரதேச சபைத் தேர்தல்களைத் தவிர வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடாததால் இக்கட்சிற்கான நிலையான வாக்கினை கணிப்பதே கஷ்டமான காரியம்தான். கட்சியின் கொள்கை, குறிக்கோள் பொதுநலனை விட தனிநபர் நலன் மற்றும் குறிப்பிட்ட பிரதேச அபிவிருத்தி  மட்டுமேயாகும்.

  இக்கட்சி யாரை ஆதரிப்பாளர்கள் என வினாத் தொடுத்தாள் கண்ணை மூடிக்கொண்டே விடையைக் கூறலாம் அது மகிந்த ராஜபக்ஸதான் என்று. மகிந்த ராஜபக்ஸ தோல்வியடைந்தாலும் இக்கட்சி வெற்றி பெற்ற கட்சியிடம் இலகுவாக தஞ்சம் அடைந்து விடும் என்பதும் அனைவரும் அறிந்த விடயம்தான்.

இக்கட்சியானது  வடக்கில் அதிகமான முஸ்லிம் வாக்குப்பலத்தைக் கொண்டிருந்தாலும் கிழக்கில் மட்;டக்களப்பு மாவட்டத்தில் ஓரளவு அதிகமான அதாவது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை விட அதிகமான வாக்குப் பலத்தைக் கொண்டிருக்கின்றது. வடக்கில் இக்கட்சி மேற்கொண்ட பாரிய அபிவிருத்தித் திட்டத்தினால் மக்கள் மத்தியில் செல்வாக்கினையும் கொண்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவிற்கே ஆதரவு வழங்கும் கட்சியாகவே இது மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

திரிசங்கு நிலையில் இன்றைய அரசியல் களத்தில் இருக்கும் கட்சியாகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது. குhரணம்  யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் தலைவர் ரவுப் ஹக்கீம் கூட தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையாகும். இதற்கு இன்றை கால அரசியல் சூழ்நிலை என்றே கூறலாம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பலம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பரந்திருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தே இருக்கின்றது. இதற்கு காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு உள்ளுராட்சி சபைகளில் கூட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்வசம் வைத்துக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதேயாகும். இது தவிர வடக்கு, மத்திய , மேல், வடமத்திய, வடமேல் மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது குறிப்பிட்ட சிறுதொகை வாக்குப் பலத்தைக்கொண்டுள்ளது. ஆக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி என்பது அது கிழக்கு மாகாணம் என்றே கூறலாம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடந்த கால போக்குள்

கடைசியாக இடம்பெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவளித்தும் வெற்றி பெற்றவரே மகிந்த ராஜபக்ஸ என்பதும்  குறிப்பிடத்தக்ககது. ஆதன் பிற்பாடு இக்கட்சி அரசோடு  நிபந்தனை எதுவும் இல்லாமல் இணைந்து கொண்டது. காரணம் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியே அரசாங்கத்தோடு இணைவதனையும், தனது கட்சியைப் பாதுகாக்கவுமே தாம் அரசாங்கத்தில் இணைந்ததாக தலைவர் ஹக்கீம் அடிக்கடி கூவித்திரிவதும் கட்சி ஆதரவாளர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு விடயமாகும்

இவ்வாறான சூழ்நிலையில்; கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்றாலும் ஆட்சியமைப்பதற்கான போதிய ஆசனங்கள் கிடைக்கப்றொமையால் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நாடியது.  இச்சந்தர்ப்பத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க தழிழ் தேசியக் கூட்டமைப்பும் அழைத்த போது அதனை முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்ததனை யாரும் மறந்து விடவில்லை. இந்த அழைப்;பை நிராகரித்து அரசாங்கத்தோடு சேர்ந்து ஆட்சியமைத்தமைற்காக முஸ்லிம் காங்கிரஸ் இன்று எமது சமுகத்த்திற்கு சாதித்துக் கொடுத்தது என்ன? என்று சமுகம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்ததனை கட்சி மறந்தாலும் போராளிகள் மறக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு மட்டும் ஆதரவு வழங்குமாறு கேட்பது வேடிக்கையாகவுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்;தை எவ்வாறு பயன்படுத்துவது என முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என ஊடக அறிக்கைகளில் வெளிவந்தாலும், இக்கட்சி யாரை ஆதரிக்கும் என அதிகமான கட்சி ஆதரவாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றர். ஹக்கீம் மகிந்த ராஜபக்ஸவைத்தான் ஆதரிப்பார் என இவர்கள் பேச்சுகளில் அறியக்கூடியதாகவுள்ளது. இருந்தாலும் அடிக்கடி கட்சித்தலைவர் மேடைப் பேச்சுக்கள் பேசும் போது முஸ்லிம் காங்கிரஸ்; அரசாங்கத்தினுள் இருக்கும் ஒரு எதிர்க் கட்சி எனகூறுவதனையும் ஆதரவாளர்களால் மறந்து விடவும் முடியாது. இன்று இக்கட்சி கிழக்கிலும் தெற்கிலும் வௌ;வேறு மேடைப் பேச்சுக்களைப் பேசுவதனையே மட்டுமே அபிவிருத்தியாக கொண்டுள்ளது.

இக்கட்சி அரசியலமைப்பின் 18வது சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு அரசாங்கம் வழங்கிய அபிவிருத்தி அல்லது உரிமைப் பங்கு என்ன? கிழக்கு மாகாணத்தின் ஆட்சிற்கு உதவியதற்கு இக்கட்சிற்கு எந்த உரிமை இதுவரையில் கிடைக்கப்பெற்றது அல்லது எந்த அபிவிருத்தியை அரசாங்கம் இவர்களுக்கு வழங்கியது. குறைந்தது இக்கட்சிக்கு முஸ்லிம் முதலமைச்சராவது வழங்கியிருக்க வேண்டுமல்லவா? இக்கட்சியினாலும் அதன் ஸ்தாபக தலைவரினாலும் ஆரம்பிக்கப்பட்;ட ஒலுவில் துறைமுகத்தினுடைய திறப்பு விழாவின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீம் பெயர் கூட அழைப்பிதழில் அச்சிடப்படாமல் அவமதிக்கப்பட்ட நிலையை அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மறந்து விடவுமில்;லை. இவ்வாறு அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸானது இன்று எமது சமுகத்திற்கு என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்துள்ளன என்றால் ஒன்றுமே இல்லை என்பதனைத் தவிர வேறொரு விடையும் வராது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரான் ஹக்கீம் திரிசங்கு நிலையில் குழம்பிப் போய்யுள்ளார். அதிலும் குறிப்பாக எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது அவருக்கு இதுவரை புரியாத பின்னக் கணக்காகவேயுள்ளது. ஆனாலும் இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு இவருடைய ஆதரவு கிடைக்காமல் போய் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெறுவாராயின் அன்றிலிருந்து மகிந்த ராஜபக்ஸவை அவருடைய மூன்று ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்த்து நின்ற பெருமையை ஹக்கீம் இலகுவில் பெற்றிடுவார். அத்தோடு மகிந்த ராஜபக்ஸவின் எதிர்ப்பையும் இலகுவில் ஹக்கீம் சம்பாதிக்கும் நிலையும் ஏற்படலாம்.

மறுபுறம் மகிந்த ராஜபக்ஸவை ஹக்கீம் ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ரணிலோ அல்லது பொது வேட்பாளர்களோ வெற்றி பெற்றால் கூட ஹக்கீமால் அந்த அரசாங்கத்திகுள் இலகுவில் போய் இணையக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத சங்கட நிலையில் ஹக்கீம் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது செல்லாக் காசு நிலையே இவருக்கு ஏற்படலாம். இருந்தாலும் ஹக்கீம் மகிந்த ராஜபக்ஸவை ஆதரித்தாலும் கூட மக்கள் ஆதரிப்பார்களா? என்ற சந்தேகம் கட்சியின் உச்ச பீட உறுப்பினர்களிடையேயுள்ளும்  தோன்றியுள்ளமை அறியக் கூடியதாகள்ளது.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கினை விட முஸ்லிம் மக்களின் தனிப்பட்ட கருத்துடன் கூடிய வாக்குகளேசெல்வாக்குச் செலுத்தும் என்பதில் மாற்றமுமில்லை என்றே கூறலாம். இதனை நிருபிக்கும் வகையில் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு புகட்டிய பாடமும் மறந்து விட இயலாத மற்றொரு அம்சமாகும். ஐம்பதனாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்குகள் பதுளை மாவட்டத்தில் இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் பொது முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்தும் 5000 வாக்குகளே பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பெரும்பான்மை முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கப்பட்டமை முஸ்லிம் கட்சிகள் என்பதனை விட முஸ்லிம் மக்களின் தனிப்பட்ட மனநிலையை உணர்த்துகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் 
வாழ்கைச் செலவு அதிகரிப்பு 
அபிவிருத்தியில் பாரபட்சம்
பொருளாதார உடமைகளுக்கான பாதுகாப்பு
கலாச்சார விழுமமியங்களின் பாதுகாப்பு
மத ஸ்தலங்களின் பாதுகாப்பு
மீள் குடியேற்றம்
காணி சுவிகரிப்பு
பேரினவாத அடக்கு முறை

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் விரும்பும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதனை  விட பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் விரும்பும் வேட்பாளருக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிப்பதே சாலச் சிறந்ததாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்கப் போகின்றது? முஸ்லிம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.  பொதுபல சேனா அமைப்பு மகிந்த ராஜபக்ஸவை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டதனை முஸ்லிம் மக்கள் மறந்துள்ளார்களா?

No comments

Powered by Blogger.