Header Ads



சிலாவத்துறை மக்கள் பெரும் அசௌகரியங்களுடன்..!


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

மன்னாரில் சிலாவத்துறையில் பல பகுதிகளில் தற்போதைய சீரற்ற கால நிலை காரணமாக இன்று (03) வெள்ள நீரால் மூழ்கியிருந்ததுடன்  அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டிருந்தனர்.

குறிப்பாக புத்தளம் இளவன் குளத்தினூடாக மன்னாருக்கான பாதை முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதுடன் சிலாவத்துறை கல்லாத்து பாலம் சுமார் ஏழு அடிக்குமேல் நீர் பாய்நதோடுவதாகவும் மரிச்சிக்கட்டி, காயாக்குளி, பாலைக்குளி, கரடிக்குளி, முள்ளிக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கான பாதைகள் முற்றாக நீரால் மூழ்கி இருப்பதனால் அப்பகுதிக்கான போக்குத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக  மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் மற்றும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் எம்.பி மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.  


No comments

Powered by Blogger.