Header Ads



ஹக்கீமுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அவரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன் - ஹசன் அலி

எனக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் தொலைபேசி மூலமாக கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

நேற்று சனிக்கிழமை (முதலாம் திகதி) பாராளுமன்றத்தில் வைத்து ரவூப் ஹக்கீம் என்னிட்டம் கேட்டார் (இன்று ஞாயிற்றுக்கிழமை) அம்பாறையில் நடைபெறவிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்று..! இதற்கு நான் இல்லையென்று பதில் கூறினேன்.

கொழும்பிலுள்ள என்னுடைய வீட்டுக்கு எனது உறவினர்கள் வந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலிருந்து எனது பிள்ளைகள் மருமக்கள் வந்துள்ளனர். அவர்களுடன் நான் இருக்கிறேன். அதனால்தான் அம்பாறையில் நடைபெறும் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதைத்தவிர ஹக்கீமுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் உறுதியாக..!

அதேவேளை வரவுசெலவு வாக்களிப்பில் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்தும், ஜாதிக்கஹெல உறுமய வாக்களிப்பில் கலந்துகொள்ளாததை ஒப்பிட்டும் ''உங்களுக்கு முதுகெலும்பு இல்லைதானே...'' என ஹசன் அலியிடம் ஜப்னா முஸ்லிம் இணையம் வினா தொடுத்தபோது, 

ஹெல உறுமயவுக்கு அரசாங்கத்துடன் உள்ள பிரச்சினை வேறு, அதற்காகவே அவர்கள் அரசாங்கத்துடன் பிரச்சினைபடுகிறார்கள். அதனை தற்போது எனது தொலைபேசி மூலமாக கூறமுடியாது. வேறு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன் என தெரிவித்த ஹசன் அலி, ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் அரசாங்கத்திற்குள் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. உரியவேளையில் முஸ்லிம் காங்கிரஸ் தனது தீர்மானத்ததை அறிவிக்கும் என்றார்..?

2 comments:

  1. சிலர் முஸ்லிம் காங்க்ரசெய் கலைப்பதில் குறியாக இருக்கிறார்கள் பொண்டாட்டி புருஷன் ,குடும்பம் கிட்டயே பிரச்சினை வருகிறது எல்லாத்துக்கும் முடிவு டிவோசா பேசி தீருங்கள் முஸ்லிம் கண்க்ரச கலச்சி வேற உருவாகிறது இந்த காலத்தில கானல் நீர் போல் ஆகிவிடும் அரச்ச மாவை அறய்பது தான் இன்றைய நிலமைக்கு உகந்தது இல்லாவிட்டால் இந்த முயசிகு அரச ஆதரவும் நிதி உதவியும் பாரிய அளவில் கிடைக்கும் முஸ்லிம் கள் அவதானம்....... நம் எல்லோரும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்

    ReplyDelete
  2. அப்படியா சங்கதி நாங்கள் நினைத்தோம் எங்கே தலைவர் அரசுக்கு ஆதரவு என்று நீங்கள் அதிருப்தி என்று. சார் தயவுசெய்து இம்முறையாவது நாக்குவளிக்க அமைச்சு பதவி எதிர்பார்க்காது நல்ல முடிவா எடுங்க சார் அறிக்கை விடுவீர்கள் பின் அதை வாபஸ் பெறுவீகள் பெரிய விடாக்கண்டன் சார் நீங்க.தமிழ் தலைகளை பார்த்தாவது படிங்க சார்

    ReplyDelete

Powered by Blogger.