Header Ads



முஸ்லிம் காங்கிரஸினால் அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பிவைப்பு

கல்முனையில் முஸ்லிம் மக்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
திகாமடுல்ல மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் தேர்தல் தொகுதிகளையும் ஒன்றிணைத்து தனியான ஒர் நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

கல்முனையில் இந்த மாவட்ட நிர்வாகக் காரியாலயத்தை அமைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலளார் ஹசன் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை ஆட்சியை நிறுவும் போது அரசாங்கம் சில வாக்குறுதிகளை அளித்திருந்தது என ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனினும், அந்த வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டச் செயலகத்தில் தமிழ் மொழியில் கருமங்களை ஆற்றும் தனியான பிரிவு உருவாக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகளின் பின்னர் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறெனினும் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. மமதைபிடித்த மஹிந்தயுடன் இருப்பதைவிட முஸ்லிம்களுக்காக உயிரைக்கொடுப்பதுமேல்

    ReplyDelete
  2. இப்படியே வாக்குறுதிகளை கேட்டு கொண்டு இருக்காமல் அவற்றை செய்து முடித்த பின் அவருருக்கு அதரவு தருவதாக சொல்லுங்கள் இல்லையேல் உடன் வெளியேறுங்கள்.தமிழ் அரசியல்வாதிகளை பார்த்தாவது padingkaiya

    ReplyDelete
  3. எத்தனையோ வாக்குறுதி கொடுத்தாச்சி எதுவும் நடந்த பாடில்ல, வருகின்ற எலக்சனுக்கு முஸ்லிம் மக்களிடம் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. இதாவது சொல்லி வாக்கு கேட்பதர்க்கான முயற்சி. எல்லா அரசுடனும் பல ஒப்பந்தம்கள் செய்யப்பட்டன. எதுவும் மக்களுக்கு தெரியாது. இதுவும் மக்களை ஏமாற்ற நடக்கும் முயற்சி.
    மகிந்த ஏற்றுக்கொள்ளுவர் எலேச்சென் முடிந்தால் எல்லாம் மறந்துவிடும் தந்கலூகுரிய அமைச்சுபதவிகளைப் பெற்றிக்கொண்டு பிள்ளை குட்டிகளுடன் சந்தோசமாக இருந்தால் சரிதான். முஸ்லிம்களுக்குரிய பிரச்சினை வரும்போது அறிக்கை விட்டல் முட்டாள் போராளிகள் அமைதியாகி விடுவார்கள். கடந்த முப்பதாண்டு காலமாக முஸ்லிம் காங்கிரஸ் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறது. முட்டாள் போராளிகளே இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை. எலக்சன் வந்தால்தான் இந்த கரையோர மாவட்டம் நினைவுக்கு வருகிறது. 18 வது அரசியல் திருத்தம் தான் உங்களுக்கு மிகவும் பொருத்தமான சந்தர்ப்பம் அதையே விட்டுவிட்டு இப்போது கோரிக்கை வைக்கிறீர்களே. மகிந்த தருவாரா. இது கோமாளித்தனமில்லையா. முஸ்லிம்களே விளிப்படயுங்கள். இன்னும் இன்னும் ஏமாறாதீர்கள். இவனுகளது உநிர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு மயன்கதீர்கள். இவ்வளவு காலமும் வாய்மூடிக்கொண்டு இருந்து அனுபவித்துவிட்டு இப்போது கோரிக்கை வைக்கின்றர்கலாம். எமந்துவிடதீர்கள்.

    ReplyDelete
  4. சூடு சுரனையற்றவர்கள், இப்படியே பேசுக்கொண்டிருப்பார்கள், எழுதிக் கொண்டிருப்பார்கள். சுயநலக் கும்பல்கள். மக்களே ஏமாந்து விடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.