ரஷிய போர் விமானத்தை விரட்டிய இங்கிலாந்து
ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன் நாடு ஐரோப்பிய பகுதியில் அமைந்துள்ளது. உக்ரைனில் உள்ள கிரீமியா பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இந்த பிரச்சினையை அடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இதனால் ரஷியா ஐரோப்பிய நாடுகளை உளவு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 நாட்களுக்கு முன்பு சுவீடன் நாட்டின் கடல் பகுதியில் ரஷிய நீர்மூழ்கி கப்பல் நடமாடியதாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து வான்வழி பகுதியில் ரஷிய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது. ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள லூசிமவுத் பகுதியில் அந்த விமானம் பறந்து சென்றது. இதை கண்டுபிடித்த இங்கிலாந்து விமானப்படை உஷார் அடைந்தது.
உடனே இங்கிலாந்து போர் விமானங்கள் பறந்து சென்று ரஷிய விமானத்தை விரட்டியடித்தன. இந்த பிரச்சினையால் பதட்ட நிலை உருவாகி உள்ளது. 3 நாட்களுக்கு முன்பும் இதேபோல ரஷிய விமானம் ஒன்று இங்கிலாந்து வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment