Header Ads



மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதலாவது சர்வதேச உதவி முஸ்லிம் நாட்டிலிருந்து..!

கொஸ்லாந்த மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தானின் முதல் கொள்கல விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

பாகிஸ்தானில் இருந்து 100 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை எடுத்து வந்த மேற்படி விமானத்துக்குப் புறம்பாக, பாகிஸ்தான் நாளைய தினமும் நிவாரணப் பொருட்களோடு தனது இரண்டாவது விமானத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜெனரேட்டர்கள், பிளாஸ்ரிக் கொட்டகைகள், புகலிட துணிகள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையே பாகிஸ்தான் இவ்விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைத் தொடர்பு கொண்டு உதவி செய்யக் காத்திருப்பதாக வழங்கிய உறுதி மொழியின் பிரகாரமே இந்நிவாரணப் பொருட்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ராஹில் ஷெரீபும், தாம் வேண்டிய உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசியப் பிராந்திய நட்பு நாடு என்கிற அடிப்படையில், இவ்வனர்த்தம் தொடர்பில் பாகிஸ்தானே முதல்  மனித நேய நிவாரண உதவியைச் செய்துள்ளது.

1 comment:

  1. அன்பின் jaffna முஸ்லிம் ஆசிரியரே இந்த செய்தியை சக்தி டிவி ரங்கா அவர்களுக்கு அனுப்பி வையுங்கள் ஏன் என்றால் அவர் நேற்று மண்சரிவு நடந்த பகுதியில் எதோ பிதற்றி இருந்தார்

    ReplyDelete

Powered by Blogger.