Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை நிராகரிக்கிறோம் - பாராளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு


நாட்டில் மேலும் ஸ்திரமின்மையை உருவாக்கும் என்பதால், முஸ்லிம்களை கொண்ட தனியான நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்த இணங்க போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீதிமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை கரையோரை பிரதேசங்களை இணைந்து தனியான நிர்வாக மாவட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் டி. எம் ஜயரத்ன, இலங்கையில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் நாட்டில் ஐக்கியமானவே வாழ விருப்புவதாகவும் நாட்டை பிளவுப்படுத்தி வாழ விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

கிழக்கில் மாத்திரமல்ல மத்திய மாகாணத்திலும் பெரும்பாலான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டை பிளவுப்படுத்த சென்றால், அது நாட்டிற்குள் பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.