Header Ads



ஐ. தே. க. வெற்றிபெற 9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற வேண்டியுள்ளது - லக்ஸ்மன் கிரியெல்ல

(jm.Hafeez)

தற்போதைய நிலையில்  தேசிய தேர்தல் ஒன்றை எதிர் கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கு ஒன்பது சதவீதமான வாக்குகளே தேவைப் படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இலகுவாக அதனைப் பெற்று இனிவரும் தேர்தல்களில் வெற்றி பெறமுடியும் என கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

(2.11.2014) கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம் பெற்ற செங்கடகல தொகுதியின் 'ஜனஜய' (மக்கள் வெற்றி) வேலைத்திட்டம்  தொடர்பாக இடம் பெற்ற பொதுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

அடுத்து வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறுவது தெளிவாகத் தெரிகிறது. காரணம் இறுதியாக முடிவடைந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் அதனைத் தெளிவு படுத்துகிறது. முதலாவதாக, அத்தேர்தலில் 41  சதவீத வாக்குகளை ஐ.தே.க. பெற்றது. அதுவும் அனைத்து வளங்களையும் சக்தியை யும் பாவித்து அரசு போட்டியிட்ட நிலையிலேதான்  அதனை அடைந்தோம். 1977ம் ஆண்டு காலப் பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் ஆணமடுவ தொகுதியில் திஸ்ஸ வடிமங்காவ என்பவர் வரட்சி நிவாரணம் வழங்கிய காரணத்தால் முறைகேடான தேர்தல் என்று நீதி மன்றம் தீர்மானித்து ஆசனத்தை இழந்தார்.

ஆனால் ஊவா மாகாண சபைத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்திலுள்ள சகல வீடுகளுக்கும் தலா 2500 ரூபா வீதம் வரட்சி நிவாரணம் என்ற பெயரில் பணம் வழங்கப்பட்டு மற்றும் பொருட்கள் பலவும் வழங்கப்ட்டே வெற்றி பெறப்பட்டது. ஆனால் நீதி மன்றத்தை நாட முடியாமைக்குக் காரணம் அரசியல் அமைப்பின் 17 வது திருத்தத்தின் படி ஜனாதிபதியிடம் நீதி மன்ற ஒழுங்கு விதிகள்  பதவி நியமனம் என்பன குவிந்துள்ளதன் காரணமாகும்.

அடுத்ததாக இதே அடிப்படையில் ஏனைய இடங்களில் உள்ள மக்களும் ஒரு தேசிய தேர்தலில் வாக்களித்ததாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதலான விகிதாசார வாக்குகள் கிடைக்க உள்ளன. எனவே எம்மால் இலகுவாக வெற்றி கொள்ள முடியும். 

அடுத்ததாக எமக்கு புதிதாக 9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற வேண்டியுள்ளது. 5 சதவீதமான ஐ.தே.க. வாக்குகளை எம்பக்கம் திரும்புவதன் மூலம் அங்கு 5 சதவீதம் குறையும் போது எமக்கு 5 சதவீதம் அதிகரிக்கும் எனவே 10 சதவீத வித்தியாசம் மூலம் இலகுவாக வெற்றி ஈட்லாம். அது மட்டுமல்ல ஊவா மாகாண சபைத் தேர்தல் மூலம் 10 சதவீத்திற்கும் மேற்பட்ட  வாக்குச் சரிவு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடாந்து சரிந்து கொண்டே போகும்.

நான்கு நாளைக்கு ஒரு தரம் ஏதாவது ஒரு பொருளின் விலையை அதிகரிக்கா விட்டால் அரசுக்கு தாக்குப் பிடிக்க முடியாத அளவு பொருளாதாரச் சிக்கள் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் மூலம் பொது மக்களுக்கான சகாயம் எதுவும் கிடைக்க வில்லை. வாகனக்கடன், வீட்டுக்கடன், சுயதொழில் கடன், மகளிர் விவகார அபிவிருத்திக் கடன் என்று இலக்கங்களால் ஒரு மாயா ஜாலம் மட்டுமே காட்டப்பட்டதே ஒழிய நேரடி சகாயங்கள் இல்லை.

எனவே கொழு;பில் இருந்து திட்டம் தீட்டிப் பயன் இல்லை வெற்றி பெறப் போவத நாம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் நாம் வாக்களிப்பு நிலையத் தலைவர்களை நியமித்துள்ளோம். அவ்வாறான ஒரு தலைவருக்கு 34 உதவியாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் 34 பிரிவாகப் பிரந்து மேற்பார்வை பணிகளைச் செய்வர். எனவே நாம் எதிர்பார்க்கும் இலக்கு அடையப் பெறமுடியும்.

பாராளுமன்ற உற்பகுதி நடை பாதையில் நாம் சந்திக்கும் சில அரச ஆதரவு பாராளுமன்ற அங்கத்தவர்கள் எம்மிடம் கேட்கிறார்கள் ஆட்சி மாற்த்திற்கு நாம் தயார். நீங்கள் தயாரா என்று. அது மட்டுமல்ல அரசின் பங்காளிக்கட்சிகள் பல இரு கூறாகி உள்ளன. ஜாதிக ஹெலஉறுமய உற்பட இடது சாரிகள் இரு அணியாக உள்ளனர். எனவே அரசின் வீழ்சியை இது எடுத்துக்காட்டுகிறது.

மகிந்த சிந்தனையில் முன்னர் கூறப்பட்ட விடயங்கள் சிலவும் மீண்டும் கூறப்பட்டு வரவு செலவுத்திட்டம் முன் மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக  மகிந்த சிந்தன பகுதி 1 ல் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு தொழிற் சாலை வீதம் ஆரம்பி;பபதாக்க கூறப்பட்டுள்ளது. அதே நேரம் 2015 ம் அண்டு வரவு செலவுத்தி;டத்திலும் இது கூறப் பட்டுள்ளது. அதாவது முன் ஒரு முறை வரவு செலவுத்திட்டத்தில் கூறியவை மீண்டும் கூறப்படுகிறதே தவிர அவை நிறைவேற்றப்படுவத்pல்லை. 

மறைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாச காலத்தில் 10 இலட்சம் வீட்டுத்திட்டம் என்ற இலக்கு அடையப் பெற்றது. ஆடைத் தொழிற் சாலைகள் எல்லா இடங்களிலும் திறக்கப்பட்டன. ஆனால் ஒரு தொகுதிக்கு 250 வீடுகள் வீதம் அமைப்பதாக மகிந்த சிந்தனையில் கூறப்பட்டது. ஆனால் கடந்த 20 வருடகாலமாக 5000 வீடுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசின் தலைவருக்கு இரண்டு வழிகள் இருப்பதாகவும் அதில் ஒன்றைத் தெரிவு செய்யும் படியும் நான் ஒரு சமயம் கூறினேன்.

அதாவது ஒன்று இந்தியாவின் அசோக சக்கரவர்தி மேற்கொண்ட பணியைத் தெரிவு செய்ய வேண்டும்.. அல்லது ஆபிரிக்காவில் ரொபட் முகாபே மேற்கொண்ட பணியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று. அவ்வாறு பௌத்த துறவரத்தை விட்டு சர்வாதிகாரப் போக்கில் போவதை நாம் அவதானிக்க முடியும். 

இன்றைய அரசில் சிக்களுக்கு அரசியல் யாப்பை சிலர் குறை கூறுவர். தவறு யாப்பில் அல்ல. யாப்பு திருத்தங்களை மேற்கொண்ட போது நீதி மன்றங்கள் வழங்கிய தீர்ப்பே காரணமாகி உள்ளது. பாராளுமன்ற அங்கத்தவர் கட்சி மாற முடியாது என்ற யாப்பு விதியை மதிக்காது ஒருவர் முதன் முதலாவது கட்சி மாறிய போது அது தவறு என்ற தீ;ப்பு கிடைக்கப் பெற்றிருந்தால் இன்று எதிரணியில் உள்ள 60 பேர் கட்சி மாறி இருக்க மாட்டார்கள். முதலில் வழங்கப்பட்ட தீர்ப்பு அடுத்த நிலைமைகளில் முன் உதாரணமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப் படுகிறது..

இது போல் ஊவா தேர்தலில் வரட்சி நிவாரணம் வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையாளர் தடை விதித்த போது அவருக்கு எதிராக வழக்குத் தாக்கள் செய்து அவரை நீதி மன்றம் அழைத்து விசாரித்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன இருவர் தம்மிடையே பேசிக்கொண்டு வழக்கொன்றை தாக்கள் செய்தனர். எமக்கும் அவர்களைப் போன்று நிவாரணம் வேண்டும். ஆனால் அவர்களுக்கு வழங்கப் படுவது தொடர்பாக எமக்கு ஆட்சேபனை இல்லை என்றனர்.  எனவே தேர்தல் ஆணையாளர் விடுத்த  தடையை வெற்றி கொள்ள இலகுவாக நீதி மன்ற அனுமதி பெறப்பட்டது. இப்படி சில முன் உதாரணங்களை தீர்பாகப் பெற்றால் பிற்காலத்தில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். 

அதேபோல் 17 வது திருத்தத்திற்கு அனுமதி அளித்து விட்டு சில அமைச்சர்கள் தற்போது போலியாக நாடகம் ஆடுகின்றனர். இது அரசியல் அமைப்பிலுள்ள தவறு அல்ல. திருத்தத்திற்கு வாக்களித்தவர்களது தவறாகும்.

எனவே ஊவாவில் தனிக்கட்சியாக இருந்து போராடி 9 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஐ.தே.க.யானது கூடிய கெதியில் தற்போதைய அரசிற்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று சேர்த்து 9 சதவீத வாக்கு வித்தியாசத்தை ஈடுசெய்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments

Powered by Blogger.