ISIS அழிப்பதுடன், ஆசாத்தை பதவி இறக்கவும் துருக்கி போராடும் - எர்டோகன்
துருக்கியில் 01-10-2014 நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அந்நாட்டின் அதிபர் எர்டோகன் முதல் உரையை மேற்கொண்டார். அப்போது இஸ்லாமிய அமைப்பு உட்பட தங்கள் பகுதிகளில் காணப்படும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களுக்கும் எதிராகப் போரிட எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அதே சமயம் சிரியாவில் அதிபர் பதவியில் உள்ள ஆசாத்தை நீக்க முயற்சிப்பதுவும் தங்களின் முக்கியக் குறிக்கோளாக இருக்கும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டினைப் பாதுகாக்கவும், குடிமக்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் பாராளுமன்ற அரசாங்க அமைப்பினை ஊக்குவிக்கவும் தற்போதைய சிரிய அதிபரை ஆட்சியிலிருந்து நீக்குவதும் தங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அதிபர் ஆசாத்தைப் பதவியிலிருந்து இறக்க ஜிகாதிப் போராளிகள் மேற்கொண்ட உள்நாட்டு யுத்தத்தில் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்தனர்.
இருப்பினும், சமீபத்தில் அங்கு நடைபெற்ற தேர்தலிலும் ஆசாத் வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகின்றது.
Post a Comment