Header Ads



தர்காநகரில் காடையர்களினால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது

-மர்லின் மரிக்கார்-

அளுத்கம, தர்காநகர் கலவரத்தின் போது சேதமடைந்த தர்காநகர், மரிக்கார் வீதி வீட்டுத் திட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு 17ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு அஸர் தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது. 

இவ்வைபவத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாகவும் மேற்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஒபேமெதவல கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்ளுகின்றனர். 

இவ்வைபவத்தில் இப்பிரதேசத்திலுள்ள கந்த விகாரை, நாகந்த பெகொட, அம்பகஹகந்திய, மாலெவன்கொட, காலவில ஆகிய விகாரைகளின் விகாராதிபதிகள் விசேட அதிதிகளாக கலந்து கொள்ளுகின்றனர். 

அத்தோடு புனர்வாழ்வு அதிகார சபை, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை, தேசிய சூறா சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் ஊர் பிரமுகர்களும் இவ்வைபவத்தில் பங்குபற்றுகின்றனர்.

சேதமடைந்த இப்பள்ளிவாசலைப் புனரமைப்பதற்கான ஆரம்ப செலவாக 1.85 மில்லியன் ரூபா அரசாங்கம் வழங்கியது. அத்தோடு பள்ளிவாசலின் அலங்கார வேலைப்பாடுகளுக்கான பொருட்களை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் பெற்றுக் கொடுத்தனர்.

இப்பள்ளிவாசல் மேஜர் ஜெனரல் ஒபே மெதவலவின் கண்காணிப்பில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் ஆலோசனைகளுடன் இராணுவத்தினரின் 90 வீத உடலுழைப்பில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்த க்கது. 

இதேவேளை இச்சம்பவத்தில் சேத மடைந்த வீடுகளும், கடைகளும் மேஜர் ஜெனரர் ஒபே மெதவலவின் கண்காணிப்பில் பாதுகாப்பு படையினரால் புனரமைக்கப்பட்டு வருவதும் சுட்டிக் காட்டத்தக்கது. 

No comments

Powered by Blogger.