Header Ads



அலரி மாளிகைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்தது..!

(மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

இன்று (24) நாடாளுமன்றத்தில் அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்ட பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. இதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு அரச தரப்பிலிருந்து ஓர் அவசர தகவல் கிடைத்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அலரி மாளிகையில் சந்திக்க விரும்புவதாகவும் அங்கு வருமாறுமே அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து அமைச்சர் ஹக்கீம் இந்த விடயம் தொடர்பில் தனது கட்சி எம்பிக்களிடம் கலந்தாலோசித்துள்ளார். அதன்போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பை நிராகரித்துள்ளனர். முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள், தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்தும் அரசினால் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பில் அனைத்து எம்பிக்களும் ஒன்றாகக் குரல் கொடுத்து இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அமைச்சர் ஹக்கீம் தனது கட்சி எம்பிக்களின் நிலைப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்குத் தெரிவித்துள்ளார். இதனால் இன்றைய சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.அவ்வாறு இன்று சந்திப்பு ஒன்று நடந்திருந்தால் நாளை (25) முஸ்லிம் காங்கிரஸ் தரப்பை ஜனாதிபதி சந்திக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தொடர்பில் ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செலயாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலியைத் தொடர்பு வேதனையை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் சில கருத்துகளை அவர் ஆளுந்தரப்பிடம் கூறியுள்ளார். விசேடமாக, கடந்த காலங்களில் தருவதாக கூறி இதுவரை நிறைவேற்றப்படாமலிருக்கும் கரையோர மாவட்டம் உட்படலாக தங்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை ஏன் செய்து முடிக்கவில்லை என்பது தொடர்பில் அரசு பகிரங்கமாக அறிக்கை ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை உட்படலான பல விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியிருப்பினும் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் ஒன்றாக நின்று குரல் கொடுத்து தங்களது ஐக்கியத்தை அரசுக்கு வெளிப்படுத்தியமை உற்சாகமான, மகிழ்ச்சியானதொரு விடயம்.

உள்ளே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சமூகம் என்ற ரீதியில் அவர்கள் இவ்வாறு ஒற்றுமைப்பட்டு கருத்து தெரிவித்தமை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த ஒரு விழிப்புணர்வு என்றே கூறலாம். என்னைப் பொறுத்த வரையில் இந்த விடயத்தை அறிந்தவுடன் அதிர்ச்சியுடன் மகிழ்ந்து போனேன்.

1 comment:

  1. மக்களே.. ஆரம்பித்து விட்டார்கள்.., இவர்கள் இன்னும் நிறைய கூருவார்கள், இந்த ஒற்றுமை, ராஜபக்சவுடன் ஒற்றுமையுடன் போய் சேர்வதட்காவும் இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.