Header Ads



தொண்டமான் அடம்பிடிக்கிறார் - ஊவா மாகாண அமைச்சு பதவியேற்பதில் சிக்கல்

(அஷ்ரப் ஏ சமத்)

இன்றைய ஞாயிறு லங்காதீபா பத்திரிகையில் தலைப்புச் செய்தியில், ஊவா மாகாணசபையில் 4 அமைச்சுப் பதவிகளில் 50 – 50 கேட்டு ஆறுமுகன் தொண்டமான் அரசுக்கு அழுத்தம் இதனால் இந்த இழுபரியினால் மகாணசபை அமைச்சர்கள் நியமிக்க முடியாமல் உள்ளது. 

இ.தொ.கா  இல்லாவிட்டால் பதுளையில் அரசாங்க கட்சி படுதோல்வியடைந்திருக்கும். எங்களது மலையக மக்கள் இ.தொ.காங்கிரசின் ஆதரவாளர்கள் 50 ஆயிரம் வாக்குகளை வெற்றிலைக்கு அளித்ததானால்தான் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்னனி பதுளையிலும்  வெற்றிபெற்றது.

அதற்காக ஊவா மகாணசபையில் கிடைத்த 2 தேசியபட்டடியல் மாகாணசபை உறுப்பிணர் ஒருவரை இ.தொ.கா உறுப்பிணருக்கு ஜனாதிபதி வழங்கியதாக ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் சசிந்திர ரஜபக்ச தெரிவிப்பு. 

ஊவாவில் உள்ள 4 மகாணஅமைச்சில் இரண்டை இ.தொ.காங்கிரஸூக்கு தரமுடியாது.  அதே நேரம் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்ணனி உறுப்பிணர் ஒருவர் மொன்றாகலையில் வெற்றிலைச் சின்னத்தில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கும் மாகாண அமைச்சர் வழங்கும்படி விமல் வீரவன்ச் கோரிக்கை விடுத்திருந்தார். அவ்வாறு தரமுடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

கடந்த மகாணசபதைதேர்தலில்  செந்தில் தொண்டமான் பதவி வகித்த அமைச்சர் பதவியை மட்டுமே மீண்டும் கொடுப்பதற்கு அரசு தயாhரக உள்ளது.

அதே நேரம் ஜ.தே.கட்சி ஹரின்பெர்ணான்டேர் தொண்டமானின் உறுப்பிணர்களை எதிர்கட்சிக்கு வருமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

No comments

Powered by Blogger.