மேற்கு நாடுகளையும், அவை சார்பு ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்த தய்யிப் எர்துகான்
மேற்கத்திய நாடுகளின் அடிப்படையற்ற விமர்சனங்களுக்கு அஞ்சவில்லை என்று துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்தார். தேசப்பாதுகாப்புக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை தான் துருக்கியும் தனது பாதுகாப்புக்கு அளித்து வருகிறது என்று அவர் கூறினார்.
அங்காராவில் ஓம்புட்ஸுகளின் சிம்போசியத்தில் உரை நிகழ்த்தினார் எர்துகான்.அப்போது அவர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் ஏஜன்சிகளுக்கு அளித்துள்ள கூடுதல் அதிகாரத்தை நியாயப்படுத்தினார்.
துருக்கியில் தடைச் செய்யப்பட்ட குர்து கட்சியின் தலைமையில் நடந்த போராட்ட நிகழ்வுகளுக்கு பிறகு பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டது.தாக்குதல்களை ஒடுக்க துருக்கி கடைப்பிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து மேற்கத்திய நாடுகள் விமர்சனங்களை எழுப்பியிருந்தன.
இதுக்குறித்து எர்துகான் தனது உரையில்,’அக்கிரமங்களை ஒடுக்க எந்த நடவடிக்கைகளை ஐரோப்பாவும், அமெரிக்காவும் கையாண்டுள்ளதோ அதனையே துருக்கியும் கையாளுகிறது.சொந்த நாட்டில் நடைபெறும் வரம்பு மீறல்களை சுதந்திரப் போராட்டம் என்று அழைக்க ஐரோப்பா தயாராகுமா? என்று எர்துகான் கேள்வி எழுப்பினார்.
ஊடக சுதந்திரத்தின் பெயரால் துருக்கியை சிலர் விமர்சிக்கின்றனர்.கொலை, தீவிரவாதம் போன்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஊடகவியலாலர்களே சிறையில் அடைக்கப்பட்டனர்.காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 16 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இவ்வாறு எர்துகான் தெரிவித்தார்.
Post a Comment