''மருத்துவ சாதனை'' கருப்பை மாற்று ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
பொதுவாக புற்று நோய் மற்றும் குழந்தை பிறப்பு பாதிப்பு போன்றவற்றால் பெண்களின் கருப்பை பாதிக்கப்பட்டு செயல் இழக்கும். அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. வாடகை தாய் மூலமே தங்களது குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் முதன் முறையாக கருப்பை மாற்று ஆபரேஷன் செய்த 36 வயது பெண் குழந்தை பெற்று இருக்கிறார். அவருக்கு பிறவிலேயே கருப்பை இல்லை.
எனவே, 60 வயது பெண்ணிடம் இருந்து கருப்பையை தானமாக பெற்றார். அதன் மூலம் கரு முட்டைகள் உற்பத்தி ஆகின. பின்னர் தம்பதிகள் கோதன்பர்க்கில் உள்ள சஹிகிரண்ஸ்கா பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெற்றனர்.
அதன் மூலம் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அப்பெண்ணுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை 1.8 கிலோ எடை உள்ளது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த தகவல் இங்கிலாந்தின் மருத்துவ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றது மருத்துவ உலகின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
Post a Comment