Header Ads



நித்திரையில் இருந்து எழுந்த பைத்தியக்காரன் போல அதுரலியே ரத்ன தேரர் பிதற்றுகிறார் - ஞானசார

ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுபலசேனா இரண்டும் ஒரே கொள்கை கொண்ட அமைப்புகள் என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதுரலியே ரத்ன தேரரின் புதிய அரசியல் முன்னெடுப்பு தொடர்பாக இன்று அவரிடம் வினவப்பட்டபோதே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹெல உறுமயவுடன் ஒத்துப் போக நாங்கள் தயார். ஆனால் ரத்ன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர் ஏதோ நித்திரையில் இருந்து எழுந்த பைத்தியக்காரன் போல பிதற்றிக் கொண்டிருக்கின்றார் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஜனாதிபதிக்கு எதிராக நீர் சொன்னால் அது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், அதேவேளை மற்றவர்கள் சொன்னால் அது உம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியளவில் இல்லை. ஞானசாரருக்கும் மிருக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மிருகங்களால் பேசமுடியாது ஆனால் அவை மிருகாபிமானமுள்ளவை. இவருக்கோ மனிதாபிமானம் இல்லை.

    ReplyDelete
  2. Since the Hela Urumaya Sudden Decision, did take a place for Corruption against Minister Champikka ranawakka. BBS is supporting to M-R because they are paid and freed by him.

    ReplyDelete

Powered by Blogger.