Header Ads



பொதுபல சேனாவின் கருத்து, அரசின் கருத்துக்களா..?

(நஜீப் பின் கபூர்)

கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் பொது பல சேனா அமைப்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கூட்டமொன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் இலங்கையை பௌத்த மயமாக்கள் தெடர்பான பல தீர்மானங்கள் எடுக்கப்ட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்திற்கு 7000 பௌத்த பிக்குகள் வருகை தர இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொது மக்கள் என்பதனை அங்கு பார்க்கக் கூடியதாக இருந்தது.

வத்திக்கானில் பாப்பாண்டவர் தலைமையில் ஒரு கிருஸ்த்தவ அரசு இருந்து வருகின்றது. இஸ்லாமிய அரசு பற்றி நிறையவே நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்து அரசு பற்றிய சித்தாந்தங்கள் கூட இருந்து வந்திருக்கின்றது. நாம் அறிந்த வரை இப்போது முதல் முறையாக பௌத்த அரசு என்ற ஒரு கதையைக் கேள்விப்படுகின்றோம். பௌத்த அரசொன்றை இந்த நாட்டில் நிறுவும் உரிமையும் பௌத்த மக்களுக்கு இருக்கின்றது என்பது கட்டுரையாளன் கருத்து. 

அவ்வாறு புத்த பெருமானின் சிந்தனை அடிப்படையில் இந்த நாட்டில் பௌத்த அரசொன்று அமையுமானால் இந்த நாட்டில் வன்முறைகளுக்கு இடமிருக்காது. எறும்பு போன்ற சிறு பிராணிகளுக்குக் கூட அந்த ஆட்சியில் நோவினைகள் நடக்காது. பௌத்த அரசொன்று இந்த நாட்டில் மலரும் போது இந்த நாட்டில் சாலைகள் ஒழுங்கை தோறும் அமைந்து இருக்கின்ற கல்லுக் கடைகள் எல்லாவற்றிற்கும் மூடு விழா நடக்கும்.  இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கும் பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைக்கும். 

இன்று மக்கள் அவைகளில் இருக்கின்ற அனேகமான உறுப்பினர்கள் கல்லுத் தவரணைகளுக்குச் சொந்தக் காரர்களாக இருக்கின்றவர்கள். பௌத்த அரசொன்று தோன்றும் போது அவ்வாறானவர்கள் மக்களவைகளுக்கு பிரவேசிக்க முடியாதிருக்கும். சகல மக்களுக்கும் சம உரிமைகள் கிடைக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நிம்மதியாக இந்த  நாட்டில் வாழ் முடியும். அவ்வாறு இந்த நாட்டில் புத்த பெருமானின் போதனையின் படி ஆட்சியொன்று மலருமானால் ஆட்சியாளர்களின் வாழ்க்கையிலும் வார்த்தைகளிலும் மென்மையும் கருணையும் இருக்கும். எனவே புத்த பெருமானின் போதனைப்படி ஆட்சியொன்று இந்த நாட்டில் மலருமானல் இந்த நாட்டில் வாழ்கின்ற பௌத்தர்களை விடவும் சிறுபான்மை சமூகங்கத்தினரே இன்று அதிகம் மகழ்சி  அடைவார்கள்.  

ஆனால் இங்கு ஞானத்iதார் நிறுவப்போகும் பௌத்த அரசு வன்முறையும் கொடுங்கோல் நடவடிக்கைகளும் அச்சுறுத்த்களும் நிறைந்ததாகவும் இன ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுகின்ற அரசாகவும் அது அமையும். அத்துடன்   அவர் நிறுவும் அரசில் குடிகாரர்களுக்கு நல்ல வசதி வாய்ப்புக்கள்  கிடைக்கும் என்று எதிர் பாக்க முடியும் ஏன் என்றால் ஞானத்தாருக்கு கூட அது தேவை என்பது அவர் போதையில் வண்டி ஓட்டிக்  பொலிஸில் சிக்கிய விடயம் பொலிஸ் அறிக்கைகளில் இருந்து தெரிய வருகின்றது. அமைச்சர் மேர்வின் சில்வா ஞானத்தரின் காதலி தற்போது பிரான்சில் வசிக்கின்றார் என்று பகிரங்கமாக ஊடகங்களுக்கு சொல்லி  வருக்கின்றார். எனவே மியான்மர் விராது தேரருடன் சேர்ந்து ஞானத்தார் அமைக்கப்போகின்ற பௌத்த அரசு எப்படியு அமையும் என்பதற்கு அவர் தனிப்பட்ட வாழ்க்கை  நல்ல உதாரணம்.

இந்தப் பின்னணியில் மாத்தளை இரத்தோட்டைப் பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் பலர் துப்பாக்கி சகிதம் நடமாடி வருகின்றார்கள் என்ற விடயம் தொடர்பாக இரத்தேட்டை பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி பொலிஸில் முறைப்பாடொன்றைக் கொடுத்திருக்கின்றார். இந்த முறைப்பாட்டை நீக்கிக் கொள்ளுமாறு அவருக்குத் தற்போது கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்ட்டு வருகின்றது. இந்த விவகாரம் இரத்தோட்டை பிரதேச சபையில் அதன் தலைவர் ஜயந்த புஸ்பகுமார தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசப்பட்டிருக்கின்றது என்ற செய்திக் குறிப்பொன்றைப் படிக்க முடிந்தது. மியான்மரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பௌத்த தேரர்கள் ஆயுதங்களைத் தூக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் ஒருவருக்குச் சொந்தமான இந்த காணியில் இவர்கள் ஆயுதப்  பயிற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்கள் என்று தான் கரு வேண்டி இருக்கின்றது. 50 ஏக்கர் பரப்பைக் கொண்ட இந்த நிலச் சொந்தக்காரர் தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனநாயக ரீதியில் தீபெத்துக்காகப் போராட்டங்களை நடாத்திவரும் தலைலாமாவுக்கு இந்த நாட்டிற்கு வந்து போவதற்கு அரசு ஒரு காலத்தில் தடை விதித்திருந்தது. ஆனால் பயங்காரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 969 அமைப்பின் தலைவர் அஸ்வின் விராது தேரர் இந்த நாட்டிற்கு சுதந்திரமாக வந்து போவதற்கு அரசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அவர் ஆபத்தானவர் அல்ல என்றும் சான்றிதழ் கொடுத்திருகின்றது.  பர்மா அரசும் இங்கையில் பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைகளைக் கண்டு கௌ;ளாதது போல் அங்கும் இந்த அஸ்வின் விராது தேரரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதே நேரம் நமது ஜனாதிபதி உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று ஐ.நா.வில் உரையாற்றிக் கொண்டிருக்கின்ற  அதே நேரத்தில்  பயங்கரவாதி என்று உலகத்தாரால் முத்திரை குத்தப்பட்ட அஸ்வின் விராது இங்கு வந்து மாநாடு நடத்திவிட்டுச் சென்றிருக்கின்றர் என்பது வேடிக்கை. 

பொது பல சேனா மேற் கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் விடயத்தில் அரசு உரிய விதத்தில் நடந்து கொள்ளாமையினாலேயே ஊவாத் தேர்தலில் ஆளும் தரப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டது. முஸ்லிம்கள் எவரும் அரசுக்கு இந்த முறை அங்கு வாக்களிக்க வில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் ஞனாசாரரோ தேர்தலில்  தான் வெற்றி பெற்றிருப்பதாக துள்ளிக் குதிக்கின்றார். இவரது இந்த நிலைப்பாட்டிற்கு அடிப்டை, நடந்து முடிந்த தேர்தலில்  பொது பல சேனாவை விமர்சிக்கின்ற நிமல் சிரிபால டி சில்வா பதுள்ளை தொகுதியிலும் அமைச்சர் டிலான் பெரேரா ஹாலிஎலத் தேர்தல் தொகுதியிலும் தோல்வி அடைந்திருக்கின்றார்கள். இவை இரண்டும் முறையே இவர்கள் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களாக இருக்கின்ற இரு தேர்தல் தொகுதிகள் என்பதால் இது தனது வெற்றி என்று ஞானத்தார் கருத்து. அவர்களை பௌத்தர்கள் தோற்கடித்து விட்டனர் என்பது அவர் கணிப்பு.

இதே வேளை ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில் அளுத்கம பேருவளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாலிகள் மீது அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது குறித்து கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றது. இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி இறந்தவர்கள் விடயத்தில் குற்றவாலிகளை நீதி மன்றத்தின் முன் நிறுத்துமாறு களுத்துறை நீதி மன்றம்  உத்தரவு பிறப்பித்திருப்பதுடன், துப்பாக்கியால் சுடப்பட்டதாலேயே அந்த மரணங்கள் நடந்திருக்கின்றது என்று நீதி மன்றம் உறுதி செய்திருக்கின்றது. ஆனால் இந்த செய்தியை எழுதிக் கொண்டிருக்கின்ற நேரம் வரை குற்றவாளிகள் கைது பற்றி எந்தத் தகவல்களும் கிடையாது. அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை. இது விடயத்தில் வீரம் பேசிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசில் தலைமைகள் எந்த விதமான அலுத்தங்களையோ, கேள்விகளையோ எழுப்பாது மௌனமாக இருந்து வருகின்றன.

பொது பலசேனா கூட்டம் போட்டு அங்கு சில தீர்மானங்களையும்  எடுத்திருக்கின்றது. அதன்படி இங்கு வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகத்தினர் சிங்களத் தமிழர்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிருஸ்தவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். தேசிய கொடியில் சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறங்கள் நீக்கப்பட வேண்டும். புதிதாக ஒரு தேசிய கொடி உருவாக்கப்பட வேண்டும். தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும், என்ற முடிவுகளும் அங்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த அமைப்பின் ஆலோசகர் திலந்த விதானேகே இலங்கையின் பெயரை சிங்கள அரசு என்ற மாற்ற வேண்டும் என்று அங்கு முன் மொழிந்தார்

அத்துடன் சர்வதேசம் பயங்கர வாதி என்று அடையலப்படுத்தியுள்ள மியான்மர் (பர்மா) விராது  தேரருடன் ஞானசாரத் தேரர் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டிருக்ன்றார். இந்த உடன்பாடிக்கையில் உள்ளடக்கங்கள் தொடர்பாக பகிரங்கமாக அறிவிக்கபடாதபோதும் அனேகமாக இது இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பர்மாவில் இலங்கையிலும்  மேற் கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பானதாக இருக்கும் என்பது கட்டுரையாளன் கருத்து. உலகலவிய ரீதியில் முஸ்லிம் தீவிர வாதத்திலிருந்து பௌத்தத்தைப் பாதுகாப்பது என்பது உடன்பாட்டின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.

மா நாட்டில் உரை நிகழ்த்திய 969 அமைப்பின் தலைவர் அஸ்வின் விராது தேரர் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களின் எதிர்ப்பையும் கருத்தில் கொள்ளாது தனக்கு விசா வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தான் இலங்கையில் பௌத்த நலனுக்காகச் செயலாற்றுகின்ற பொது பல சேனா அமைப்புடன் எதிர் காலத்தில் நெருக்கமான உறவுகளை வளர்துக் கொண்டு செயலாற்ற இருப்பதாக தேரர் தெரிவித்தார். 

இதற்கிடையில் அளுத்கம பேருவளை சம்பவங்களைத் தொடர்ந்து இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞான சாரர் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து அமைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்ற கிரம விமலஜோதி தேரர் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்று தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இவரை மீண்டும் இந்த அமைப்புக்குள் கொண்டு வந்து  தலைமைப் பதவிக்கு அமர்த்துவதில் உயர் மட்ட அரசியல் வாதி ஒருவர் பங்களிப்பை வழங்கி இருக்கின்றார் என்று தெரிய வருகின்றது. கிரம விமலஜோதி தேரர் தலைமையிலேயே கொழும்பில் பொது பல சோன அமைப்பின் கூட்டம் நடை பெற்றது.

இந்த மா நாட்டில் ஏதோ பெரிய அறிவிப்புக்களைம் தலைவர்களையும் அடையாளப்படுத்தப் போவதாக ஞானசாரர் ழுழங்கினாலும் அப்படி பெரிய அறிவிப்புக்களோ தலைவர்களோ அங்கு அறிமுகம் செய்யப்பட வில்லை. 50 இலட்சம் வாக்குகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான திட்டமொன்றை தமது அமைப்பு முன்னெடுக்கப் போகின்றது என்று ஞான சாரர் தேரர் அறிவித்திருக்கின்றார். இவர் கதையை பார்த்தால் இனி வருகின தேர்தல்களில் ஞானத்தார் உதவி பொறாது எவரும் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது போலும்.!

இதற்கிடையில் தொண்டமானினதும் ஹக்கீமினதும் ஆட்டங்களை அடக்க சம்பிக்க 10 இலட்சம் சிங்கள வாக்குகளை தமது பக்கட்டுக்களில் சேர்க்க வேண்டும் என்று அவரும் ஒரு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

பொது பல அமைப்பின் தீர்மானங்கள் தொடர்பாக கருத்துக் கூறுகின்ற அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தமிழ் பேசுகின்ற சிறுபான்தைச் சமூகங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தற்போது இலங்கையில் நடந்துவருவதாக குறிப்பிட்டார். அதே போன்று பொது பல சேனா அமைப்பிற்கு அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே அந்த அமைப்பின்  கருத்துக்களை நாம் இலங்கை அரசின் நிலைப்படாகவே தற்போது பார்கக் வேண்டி இருக்கின்றது என்று அருட் தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.

இதே வேளை சர்வதேசம் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி இருக்கின்ற  அஸ்வின் விராது தேரர் வருகை பற்றி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசேக்கர தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு  தமிழ் நாட்டிலிருந்து செயல்படுகின்ற பயங்கரவாத அமைப்பான தவ்ஹீத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் இங்கு வந்து நிகழ்வுகளில் பங்கு கொள்கின்ற போது  அஸ்வின் விராது தேரர் வருகையை எம்மால் தடுக்க முடியாது. மேலும் அவர் வருகையால் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஏதும் பாதகமான விளைவுகள் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவித்திருப்பதுடன் அவர் ஒரு பௌத்த மத போதகர் என்றே நாம் அவரை பார்ப்பதாகவும் கூறி இருக்கின்றார்.  

No comments

Powered by Blogger.