அமைச்சர் எஸ்.பி.யை சுற்றிவளைத்த மாணவர்கள், பொலிசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர்
அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவுடன் மாணவர்கள் கடும் வாக்குவாதம் மேற்கொண்டதையடுத்து சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடமொன்றை திறந்து வைப்பதற்காக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இன்று அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை, சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் கைது போன்ற விடயங்கள் குறித்து மாணவர்கள் குழுவொன்று அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை தோன்றியதையடுத்து, கலகமடக்கும் பொலிஸார் உடனடியாக அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் களேபரங்களுக்கு இடையில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றிருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
Post a Comment