Header Ads



ஹஜ் கடமையின்போது, சுயமாக படம் பிடித்துக்கொள்வது..!

(Tn)

புனித ஹஜ் கடமையின்போது யாத்திரிகர்களிடம் சுயமாக படம் பிடித்துக்கொள்ளும் ~செல்பி' படங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில் அதுகுறித்து மதத்தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் அதிகரித்துள்ளன.

ஹஜ் கடமையின்போது யாத்திரிகர்கள் தம்மை தாமே படம்பிடித்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதில் பிரதான வழிபாடான கஹ்பாவை வலம்வரும் போதும் செல்பி படங்கள் எடுத்து சமூக தளங்களில் போடுகின்றனர். புனித தலத் திற்குள் கெமரா இணைக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளுக்கு நிர்வாகத்தினர் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டதை அடுத்தே யாத்திரிகர்களிடம் இந்த பழக்கம் தொற்றியுள்ளது.

இந்த செல்பி பழக்கத்திற்கு பல மதத்தலைவர்களும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர். 'இவ்வாறான செல்பி மற்றும் வீடியோக்கள் எடுப்பது இறைத்தூதரின் வழிமுறைக்கு முரணானதாகும்" என்று சவு+தி மத அறிஞரான அஸ்ஸிம் அல் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். 'இவ்வாறான நடைமுறை சுற்றுலாக்களை குறிக்கோளாகக் கொண்டதாக இருக்கும். வழிபாட்டுக்கு பொருந்தாது" என்று மற்றொரு அறிஞரான அப்துல் ரஸ்ஸாக் அல் பத்திர் குறிப்பிட்டார்.

எனினும் ஒருசில மார்க்க அறிஞர்கள் இந்த நிலைப்பாட்டை நிராகரிக்கின்றனர். எகிப்தின் முன்னாள் தலைமை முப்தியும், இதனால் எந்த பாதிப்பும் இல்லையென்று குறிப்பிட்டுள்ளார். 'அனைவரிடமும் கெமாரா போன்கள் இருக்கின்றன. இதனை தடுப்பது இலகுவானதல்ல" என்று ஒரு ஹஜ் யாத்திரிகர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அதாவது மத அனுஷ்டானத்தை விட யாத்திரீகர்களின் உல்லாசம்தான் முக்கியம் என்கிறார்கள்.

    இறைவனின் சந்நிதானத்தில் உலவுகின்றோம் எனும் பயபக்தியுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை இன்று எந்தளவுக்கு அறிவியல் நுகர்வு சாதனங்களின் வருகையினாலும் அதன் மிதமிஞ்சிய பயன்பாட்டினாலும் சீரழிய ஆரம்பித்திருக்கின்றது பாருங்கள்... இன்னும் சில ஆண்டுகளிலே எப்படியெல்லாம் ஆகுமோ..?

    ReplyDelete

Powered by Blogger.