கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிக்கு விளக்கமறியலில்
கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் மேல் நீதிமன்றில் பிக்குவுக்கு எதிராக 03-10-2014 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிக்குவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிபதி தம்மிக்க கனேபொல உத்தரவிட்டார்.
ஆனாலும் பிணை வழங்கவென விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பிக்கு ஏற்றுக் கொள்ளாததால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றில் கஞ்சா கொண்டு சென்ற போது குறித்த பிக்கு தம்புத்தேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment