பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி. பாடிய கவிதை
வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கடந்த சனிக்கிழமை உரையாற்றிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கவிதை பாடினார்.
வரவு - செலவுத் திட்டத்தைப் பாராட்டி அவர் பாடிய கவிதை வருமாறு,
ஆகித்தான் போயினர் அப்செட்
பார்த்தேதான் எங்களது பட்ஜெட்
ஆச்சரியம் பூச்சொரியும் பட்ஜெட்
எங்கள் தாய்நாட்டை இமயத்தில் ஏற்றும்
யார் தருவார் இதுபோல அள்ளி
மக்கள் மகிழ்ந்திடுவர் பெருமைகளைச் செல்லி
கருங்கல்லில் நீர் பொழிந்தெடுத்த
எங்கள் ஜனாதிபதி
கடுமையாய் அதற்கு உழைத்தார்
பொதுமக்கள் நலனைத்தான் நினைத்தார்
மக்கள் மனங்களிலே என்றும் நிலைத்தார்
உழைக்கின்ற வர்க்கத்தை உயர்த்த
எண்ணித்தான் கணக்குகள் வகுத்தார்
இருபத்து ஐயாயிரம் ரூபா வழங்கி
இதயங்கள் மகிழந்திடச் செய்தார்
பல நாடுகள் சென்று வந்தார்
அங்கு பலவித அனுபவம் பெற்றார்
அதை தாய் நாடு உயர்ந்திட தந்தார்
அதனால் ஜொலித்திடும் பட்ஜெட்டினை ஈந்தார்
பாலஸ்தீன நாட்டின் தேவை
அதைக்கூட பட்ஜெட்டில் சேர்த்தார்
முஸ்லிம் நாடுகளின் தோழன் - அதனால்
அவர்களின் ஆதரவு பெற்றார்
சிரித்திடும் பட்ஜெட்டைத் தந்தார்
மனங்களை சிலித்திடச் செய்தார்
ஓய்ந்தது நம் நாட்டில் யுத்தம்
ஓயவில்லை எதிரிகள் சத்தம்
அவர்களின் வாயினை அடைக்க
செய்தார் பட்ஜெட்டால் யுத்தம்
பாருங்கள் மக்களின் முகத்தை - அது
காட்டுவது அவர்களின் அகத்தை
மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் மக்கள்
மஹிந்த ஜனாதிபதி ஆற்றலைப் பார்த்து
மிகுந்த குதூகலம் கொண்டேதான்
மக்கள் வாயார வாழ்த்தியே மகிழ்வர்
எங்கள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக் ஷவை
வாயார வாழ்த்தியே மகிழ்வர்...
காவிப் பயங்கரவாதிக்கு
ReplyDeleteகறுப்பு அனுமதி கொடுத்தார்
முஸ்லிம்கள் தலை உருள
நாள் பார்த்து வாக்குக் கேற்கிறார்..
பர்ம தேசத்து ரெத்த நாயகனுக்கு
செங்கம்பளம் விரித்தார்..
ரெத்த வெள்ளம் பார்க்க
உன்னைப் போல் போக்கிரிகளுக்கு
கட்டுக் கட்டாய் கொட்டுகிறார்..
காவிச் சேனாவுக்கு
காவிகளை காவலாக்குகிறார்
கத்தி கொடுத்து
முஸ்லிம்கள் தலைகளை
கொய்யச் சொல்கிறார்..
அபோது பாடாத கவிதைகளை
இப்போது பாடி
உசுப்பேற்றுகிறாய்..
சலுகை என்ற பெயரில்
கோவணம் நீட்டுகின்றார்
தங்கம் தந்தாய் சொல்லி
நாய் போல் நாக்கை நீட்டுகிறாய்...
எட்டு வருடங்களாய்
உறிஞ்செடுத்த காசில்
பிச்சை போடுகிறார்..
அதைப் பார்த்து நீயும்
விசுவாசத்தில்
உளறித் தள்ளுகிறாய்..
இத்தனை காலமும்
மறந்து போன மக்கள் நலன்
இப்போது மட்டும்
எங்கிருந்து வந்தது?
இவ்வளவு பணமும்
யார் உனக்குத் தந்தது..
இந்த வரிகளையும்
உங்கள் கவிதையோடு சேர்த்துக் கொள்ளுங்கள்..
கொஞ்சமாவது முஸ்லிம் சமுகத்திற்கு
உப்புப் போட்டதாய் இருக்கும்.