Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினருக்கு ஜனாதிபதியை சந்திக்க அனுமதியில்லை..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினர் மேற்கொண்ட முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ள ஒரு தரப்பினர் (எம்.பி.க்கள்) இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாட விரும்பி அதற்காக அனுமதி கோரியுள்ளனர்.

எனினும் இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து அதற்கான அனுமதி எதுவும் முஸ்லிம் காங்கிரஸினருக்கு (ஒரு தரப்பினர்  -எம்.பி.க்கள்) கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் விசனமடைந்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கிறது.

2 comments:

  1. முஸ்லிம்களின் கடைகள் வீடுகள் பள்ளிவாசல்கள் தீயில் எரியும்போது இல்லாத கரிசனை?

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வைத்து இச்சந்திப்பு முன்னெடுக்கப்பட இருக்கின்றதா?

    ஜப்னா:- முஸ்லிம் இவர்கள்யார், இச்சந்திப்பின் உண்மையான நோக்கம் என்ன என்பதை வெளிக்கொண்டுவரவேண்டும். இவர்கள் முஸ்லிம் சமூகத்தில் உண்மையான பற்றாளர்களா? அல்லது தேர்தலைவைத்து குளிர்காய எண்ணும் துரோகிகளா என்பது தெரியவேண்டும்.

    முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள அரசாங்கம் எதுவித பாதுகாப்பும் தருவதாக இருக்கவில்ல எதிர்காலத்திலும் நாம் எதிர்பார்க்கத்தேவையில்லை. முஸ்லிம்கள் இவ்வரசில் வைத்துள்ள நம்பிக்கை முற்று முழுதாக இழந்துவிட்டது. இனிமேலும் எதுவித உபகாரங்களையும் செய்யமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டிற்கு முஸ்லிம்கள். புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இதன்காரணமாகவே எந்தவொரு கட்சியோ முஸ்லிம் தலைமைத்துவமொ இவ்வரசுடன் இணந்து செயற்படுவது தமக்கு தாமே தலையில் மண்ணைவாரிப்போடும் செயற்பாடாகவே கருதும் நிலையில் இவர்கள் ஏன் இப்போது விசேடமாக ஜனாதியை சந்திக்கவேண்டும். இதில் சுய நல நோக்கு நிறையவே உள்ளது என்றுகருதவே தோன்றுகின்றது.

    உண்மையில் இவர்கள் சுய நலவாதிகளாக செயல்படுவார்களாயின் கண்டிப்பாக நாம் இம்முறை முற்று முழுதாக இவர்களை இனங்காண்பதுடன் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புறக்கணித்து ஓரங்கட்டிவிடுவதில் மும்மூரமாகவும் செயற்படவேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. சந்திப்புக்களை வைத்து வைத்து எப்படியோ உங்கள் எதிர்காலத்துக்கு எது நன்மைiயா அதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஈற்றில் முஸ்லிம்களுக்கு என்ன கேடு நடந்தாலும் வாயைப் பொத்திக் கொண்டிருந்து தருணம் பார்த்து அறிக்கை விடுங்கள். இது தானே எமது முஸ்லிம் அமைச்சர்களின் நிலை.
    முஸ்லிம்கள் என்ன கேடு கெட்டாலும், தனிப்பட்ட ரீதியில் உங்கள் வாழ்க்கை மளரவும், அதிக இலாபம் கிடைக்கவும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுக்கொள்ளுங்கள். நம் நாட்டு முஸ்லிம்கள் முட்டாள்கள், ஏமாறுபவர்கள். உங்களுக்கு இலகுவில் ஏமாற்றிவிடலாம். பயப்படாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.