Header Ads



''வெற்றி பெற'' பொது பலசேனாவின் வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்போம் - ஐ.தே.க.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தங்களுடைய கொள்கைதிட்டங்களை பரிசீலிக்குமாறு பொதுபலசேனா விடுத்துள்ள வேண்டுகோளை ஐக்கிய தேசிய கட்சி கருத்தில்கொள்ளும் என கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தனது உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள கொள்கைகளை ஏற்க்கும் கட்சிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க தயார் என பொதுபலசேனா தெரிவித்துள்ளமை குறித்து பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்க்கு எதிராக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து வலுவான கூட்டணியொன்றை அமைப்பதே எமது நோக்கம். ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரடடடுவதே எங்களது நோக்கம், இதன் காரணமாக தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக பொதுபலசேனாவின் வேண்டுகோள்களை நிச்சயமாக பரிசீலிப்போம், என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.