Header Ads



ஜனாதிபதி தேர்தலுக்காக, ராஜபக்ஸ சகோதரர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்..!

(GTN)

ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக 160 கணணிகளுடன் இரகசிய அலுவலகமொன்று அலரிமாளிகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த வழிமுறையை பின்பற்றியாவது மூன்றாவது தடவை வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளார்.

இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்க்கு இரு அலுவலகங்கள் கொழும்பு 7 லிலும் அலரிமாளிகையிலும்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்சவின் அமைச்சின் செயலாளரான கலாநிதி வில்லி கமகே கொழும்பு 7 அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல ஊடக நடவடிக்கைகளும்- இங்கிருந்தே மேற்கொள்ளப்படும்- சமூக ஊடக விசாரணை,ஆய்வுகள் உட்பட அனைத்து ஊடக செயற்பாடுகளும், கிரகெரிஸ் வீதி அலுவலகத்தில் இடம்பெறும்,மேலும் ஜனாதிபதிக்கு ஆதரவுவழங்க்கும் பல அமைப்பகளை ஒன்றினைக்கும் பணியையும் இந்த அலுவலகம் முன்னெடுக்கும்.

அலரிமாளிகை அலுவலகத்தை இரகசிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த எண்ணியுள்ளனர். மரக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவரும், முன்னாள் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிபால அமரசிங்கவை இந்த அலுவலகத்திற்க்கு பொறுப்பாக நியமித்துள்ளனர்.

இவர் இந்த நடவடிக்கைகளுக்கு மிக பொருத்தமான நபர் என சுட்டிக்காட்டியுள்ள அரசியல்வட்டாரங்கள் கொக்க கோலா நிறுவனத்தின் பணத்தை கையாட முயன்றவேளை சிக்குண்டவர் இவர் எனசுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த அலரிமாளிகை அலுவலகம் தடைசெய்யப்பட்ட பகுதியாக விளங்குகின்றது, ஆளும்பரம்பரையினர் மாத்திரமே அதற்க்குள் நுழைய முடியும். அமைச்சர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டபகுதியாக இது காணப்படுகின்றது.

இந்த அலுவலகத்தில் 160 கணணிகள் பொருத்தப்பட்டுள்ளன, இந்த கணணிகளை இயக்குவதற்க்கு ஆளும் குடும்பத்திற்க்கு விசுவாசமானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னரே அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் திகதி உறுதியானதும், 24 மணிநேரமும் பணிபுரிவதற்க்கு ஏற்ப மேலும் பலர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளுக்கும் ஒவ்வொரு கணணியை பயன்படுத்துவதற்க்கு திட்டமிட்டுள்ளனர். வாக்களார்கள் விபரம் உட்பட அந்த தொகுதி குறித்த சகல விபரங்களும் அந்த கணணியில் காணப்படும்,

சிங்கள பௌத்தர்களுடைய விபரங்களை தனியான கணணியொன்றில் வைத்திருப்பதற்க்கும் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொருவர் குறித்த தனிப்பட்ட விபரங்களும் இதில் காணப்படும்,

இந்த அலுவலகத்திற்க்கு பொறுப்பாகவுள்ள சிறிபால ஜனாதிபதி குடும்பத்திற்க்கு மாத்திரம் பதிலளிப்பார்,

மேலும் இந்த புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து எவருக்கு என்னமாதிரியான இலஞ்சம் வழங்கலாம் என திட்டமிடப்படவுள்ளது.

மேலும் தேர்தல் மோசடி குறித்த திட்டங்களையும் இவரே தீட்டவுள்ளார்.

இது தவிர வேறு நான்கு அலுவலகங்களும் அலரிமாளிகையில் திறக்கப்பட்டுள்ளன.

முதலாவது பிரிவுக்கு பொறுப்பாக அமைச்சர் ஜோன்செனிவரத்தினவும்,மகிந்தானந்த அளுத்கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர், இந்த பிரிவு நாட்டிலுள்ள அனைத்து தேர்தல் வாக்குசாவடிகளுக்கும் பொறுப்பாக காணப்படும்.
என தெரிய வருகிறது.

3 comments:

  1. எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும். அந்த வெற்றி மட்டும் கிடைத்தால் நாட்டின் கதை???

    ReplyDelete
  2. இது தான் நல்ல சந்தர்பம் எப்படி இந்த ராஜபக்ச அன் கோ களிடம் பணம் வந்ததோ அதே மாதிரி போகப் போகின்றது.

    மக்களே..! ராஜபக்ச அன் கோ களிடம் இருப்பது அனைத்தும் உங்களுடையது தான் கவலை படாமல் பெற்று கொள்ளுங்கள் ஆனால் வாக்களிக்கும் போது அவர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பாருங்கள்.

    ReplyDelete
  3. yes you are 100% correct kuruvi and Ranees

    ReplyDelete

Powered by Blogger.