ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் தடையை நீக்கியமை பயங்கர சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது - மதகுருமார் அமைப்பு
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியமை தொடர்பிலான காரணங்களை ஆராய வேண்டும் என்று இலங்கையின் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
சமாதானத்துக்கான மதகுருமார் அமைப்பு இன்று 20-10-2014 கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இந்தக் கருத்து வெளியிடப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கியமையானது பயங்கரமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் தேர்தல் ஒன்று அழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடை நீக்கமானது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அமைப்பின் உறுப்பினர் கம்புறுகமே வஜிர தேரர் எச்சரித்துள்ளார்.
எனவே இந்த தடை நீக்கத்துக்கு எதிராக இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment