Header Ads



அசீன் விராது, பொதுபல சேனா ஒப்பந்தம் - முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும்

-GTN-

இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்கள் இரண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ரொய்டர்ஸ் சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அஸீன் விராது பௌத்த தேரரின் தலைமையிலான மியன்மாரின் 969 பௌத்த அமைப்பிற்கும், கிரம விமலஜோதி தேரரின் தலைமையிலான பொதுபல சேனா இயக்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தீவிரவாத முஸ்லிம் அமைப்புக்களிடமிருந்து பௌத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களினால் பிராந்திய வலயத்தில் மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களுக்கு எதிரான முதல் கட்ட நடவடிக்கையாக பொதுபல சேனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எனவும், இந்த அமைப்பு விஸ்தரிக்கப்படும் எனவும் விராது தேரர் தெரிவித்துள்ளார்.

கடும்போக்குடைய முஸ்லிம்கள் பௌத்தர்களை மதம் மாற்றி வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்;கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடும்போக்குவாதத்தை இல்லாதொழித்து பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்ட இந்த ஒப்பந்தம் வழியமைக்கும் என பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பணையில் உள்ள இயக்கத்தின் தலைமையகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அஸீன் விராது தேரர் மற்றும் கலபொடத்தே ஞானசார தேரர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.