Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - மஹிந்தவிடம் விசாரித்த பான் கீ மூன்

அண்மையில் பேருவளை மற்றும் அலுத்கம அகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பான் கீ மூனை சந்தித்திருந்தார்.

இதன்போது சமய முரண்பாடுகள் வன்முறைகள் குறிப்பாக அலுத்கம சம்பவம் குறித்து பான் கீ மூன் ஜனாதிபதியிடம் வினவியதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொறுமையுடனும் விசுவாசத்துடனும் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஒத்துழைக்க வேண்டுமென பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்தவிடம் கோரியதாக பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பல நாடுகள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட விடயங்களில் தொடர்ச்சியாக முன்னேற்றத்தை பதிவு செய்யுமாறு பான் கீ மூன், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.