ஸலபிகளை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் ஜேர்மன் உளவுத்துறை
ஜெர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்குவதாக அந்நாட்டு அரசு உளவு அமைப்பொன்று எச்சரித்திருக்கிறது.
ஜெர்மனியின் உள்நாட்டு உளவுத் துறை அமைப்பின் தலைவர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாஸன் பெர்லினில் சனிக்கிழமை இது தொடர்பாக வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த விவரம்:
ஜெர்மனியில் இப்போது
"ஸலாஃபி' என்ற அடிப்படைவாத இயக்கமொன்று செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் சுமார் 6,300 பேர் உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த அடிப்படைவாத இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 7,000-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்த இயக்கத்தில் சுமார் 3,800 பேர்தான் உறுப்பினர்களாக இருந்தனர்.
பல்வேறு மன அழுத்தங்கள் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை இந்த இயக்கம் கவர்ந்து வருகிறது.
ஆதரவற்று இருப்பதாகக் கருதும் இளைஞர்களுக்கு, ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் அமைப்பாக "ஸலாஃபி' இயக்கம் தோற்றம் தருகிறது. இதையடுத்து, ஜெர்மனியில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் தீவிரவாதமும் தலைதூக்கி வருகிறது என்றார் அவர்.
சிரியா, இராக் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் சேர்ந்த சண்டையிட, சுமார் 450 "ஸலாஃபிகள்' ஜெர்மனியிலிருந்து சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு கருதுகிறது.
Post a Comment