அரசில் இருந்து ஒதுங்கி எதையும் எம்மால் சாதிக்க முடியாது - பேருவளை நகர பிதா மில்பர் கபூர்
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் திறவு கோல் கல்வியேயாகும். எனவே முஸ்லிம் சமூகம் கல்வியில் மேலும் உன்னத நிலையை அடைய வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டே மில்பர் கபூர் மன்றம் ஸ்தாபிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை இப்பகுதியில் செவ்வனே முன்னெடுத்துள்ளதாக பேருவளை நகர பிதாவும் மில்பர் கபூர் பவுண்டேசன் ஸ்தாபகருமான மில்பர் கபூர் கூறினார்.
சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பரிசளிப்பு விழாவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் நடவடிக்கைகளை அரசிலிருந்து கொண்டு குரல் கொடுப்பதன் மூலம் தான் ஏதாவது ஒன்றை சாதிக்க முடியும். அரசில் இருந்து ஒதுங்கி எதையும் எம்மால் சாதிக்க முடியாது.
பேருவளை - அளுத்கமை சம்பவத்தின் போது அமைச்சர் பைஸர் முஸ்தபா செயல்பட்ட விதம் பாராட்டத்தக்கதாகும். அவர் அரசில் அங்கம் வகித்ததன் மூலமே சில அதிகாரங்களை பயன்படுத்தி மோதல் மேலும் பரவாமல் தடுக்க ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பேருவளை - அளுத்கமை மக்கள் அமைச்சரின் இந்த பணிகளை என்றும் மறக்கவே மாட்டார்கள்.
பேருவளை பகுதியில் பாலம் அமைக்க ஒரு கோடி 54 இலட்சம் ரூபா நகர சபைக்கு கிடைத்துள்ளது.
மக்கள் வாக்களித்து எம்மை பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளது மக்களுக்கு சேவை செய்வதற்கேயாகும். எனது காலத்தில் மக்களுக்கு உச்ச சேவையை பெற்றுக் கொடுத்துள்ளேன். இப் பாடசாலையில் 3 மாடிக் கட்டிடம் அமைகிறது. நZம் ஹாஜியார் மகளிர் கல்லூரிக்கு கணனி பிரிவை ஏற்படுத்துவேன். ஜனவரியில் இவை திறந்து வைக்கப்படும் என்றார்.
Post a Comment