Header Ads



சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர்பலகை இனம் தெரியாதோரால் தாக்குதல்


-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 66வது  பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று தற்போதைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட  தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர்பலகைக்கு இனம் தெரியாதோரால் தாக்குதல் மேட்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (24-10-2014) மாலை மின்சாரத்தடை ஏற்பட்டிருந்த வேளை இனம் தெரியாதோரால் குறித்த தாக்குதல் மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் மேட்கொண்டோரினால் குறித்த தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவுக்கு முன்னால் பூனை ஒன்றையும் கொலை செய்து போடப்பட்டுள்ளதாகவும் தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவை நிர்மாணித்து வரும் ஒப்பந்தக்காரர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நிர்மாண ஒப்பந்தக்காரர் நிர்மாணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பொருத்துவதுடன் அழகு செடிகளையும் மரங்களையும் நட்டு தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியிலேயே கல்முனை மாநகரசபையிடம் ஒப்படைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

குறித்த தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா அமைந்திருக்கும் இடத்தில், ஏற்கனவே தற்போதைய கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனையின் முதல்வராக இருந்த வேளை நிர்மாணிக்கப்பட்ட பூங்காவில் போடப்பட்டிருந்த இருக்கைகளை உடைத்து வீசி இருந்ததும் பூங்காவை சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகளை வெட்டி வீசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஞாபகார்த்தமாக போடப்பட்ட பெயர்பலகைக்கு இனம் தெரியாதோரால் தாக்குதல் நடத்தியுள்ளதை இட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.