Header Ads



கட்டுக்கதைகளை சந்தைப்படுத்துகின்றனர் - ரவூப் ஹக்கீம்

(Inamullah Masihudeen)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அதிபர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை ஆதரிக்க உடன்பட்டுள்ளதாகவும் பிரதி உபகாரமாக அமைச்சு,பிரதி அமைச்சு மற்றும் வெவ்வேறு பதவிகள் பலருக்கும் கிடைக்க இருப்பதாகவும் வலைதள ஊடகங்களில் உலாவும் செய்திகள் குறித்து அமைச்சர் ஹகீம் மற்றும் மாகாண அமைச்சர் ஹபிஸ் நஸீர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கேட்டேன்.

மாகாண அமைச்சர் ஹாபிஸ் : கட்சி அவ்வாறான முடிவுகளை இதுவரை எடுக்கவில்லை, கட்சியை சேந்தவர்கள் பல்வேறு தரப்புக்களாலும் அணுகப்படுகின்றனர், அவர்கள் உடன்பாடுகளுக்கு வந்துள்ளார்கள் என வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மைகள் தனக்கு தெரியாது என்றார்.

அமைச்சர் ஹகீம்: முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள ஆளும் எதிர்த் தரப்புக்கள் இவ்வாறான கட்டுக் கதைகளை சந்தைப் படுத்துகின்றனர், கட்சித் தலைமை சரியான நேரத்தில் ஒன்று கூடி பரந்துபட்ட ஆலோசனைகளை நடாத்தி முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு இது மக்களுடைய கட்சி இதனை யாரும் சிதைத்து சின்னபின்னமாக்கிவிடக் கூடாது என்றும் சொன்னார், வெல்லுகின்ற குதிரையில் பந்தயம் கட்டுவது என்று ஒரு சில கட்சி முக்கியஸ்தர்கள் சோர்வில்லாமல் சொல்லியிருப்பது பற்றி கேட்ட பொழுது தனிப்பட்டவர்களின் நிலைப்பாடுகள் குறித்து இந்த சமூக இயக்கம் அலட்டிக் கொள்ள மாட்டது என்றும் சொன்னார்.

என்றாலும் எனது பங்கிற்கு :

"கடந்த நான்கு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக அடாவடித்தனங்களைக் கட்டவித்து விட்டு தமது உயிரிலும் மேலான சன்மார்க்க விழுமியங்களில் பாரம்பரியங்களில் கை வைத்து ஹலால் முதல் அழுத்கமை வரை முஸ்லிம் சமூகத்திற்கு கொள்ளி வைத்தது மாத்திரமன்றி போதாக்குறைக்கு ரோஹிங்கிய முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த கும்பல் நாயகன் அஸின் விராது அவர்களை அழைத்து வந்து அரங்கேற்றி எதிர்காலத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தமது நிகழ்ச்சி நிரலை அமபலப்படுத்திய பொது பல சேனா அறிமுகப்படுத்தவுள்ள கதாநாயகனை முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது என்றேன்"

சுகததாஸ உள்ளரங்கில் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி சங்க மாநாடு நாடத்திய பொதுபல சேனா மியன்மார் அஸின் விராதுவை விஷேட அதிதியாக அமர்த்தி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தமது எதிர்கால இலக்குகளை பகிரங்கப்படுத்தியதொடு அவற்றிற்கு துணை நிற்கும் ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாடு தழுவிய பௌத்த மதவழி பாட்டு தளங்களூடாக ஐம்பது இலட்சம் வாக்காளர்களை திரட்டவுள்ளதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளதால் முஸ்லிம்களது தெரிவு மிகவும் பாரதூரமானதாகும், பதி பட்டங்களோடும் ஒரு சில அரசியல் அபிலாஷைகளோடும் மட்டுப்பட முடியாது எனவும்..உங்கள் அனைவர் சார்பிலும் தெரிவித்துள்ளேன்.

தவறும்பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரலில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் புதிய முகங்கள் முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றம் செல்வார்கள் அதற்கான ஒரு அணி நாடுதழுவிய மட்டத்தில் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளேன்.

முஸ்லிம் காங்கிராஸ் எந்தவொரு ஆளும் அல்லது எதிர்க் கட்சியின் நிரந்தர பங்காளியாக இருக்க முடியாது, நீங்கள் சோபித தேரோ, அனுர குமார, ரணில், சந்திரிக்கா, உற்பட ஏனைய பிரமுகர்களுடனும் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபடல் வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன்.
ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு அவற்றை கவனத்திற் கொள்வதாகவும் அமைச்சர் ஹகீம் தெரிவித்தார்..

2 comments:

  1. Sakotherar ugkalukku welagkerathu antha palappoona marathukku wilagnkuma

    ReplyDelete
  2. Mr. Inamullah அவர்களே,
    ஒரு சோற்று பானைக்கு ஒரு சோறு பதம்.
    இந்த காங்கிரசும் அதன் தலைமையும் அதன் கடமையை கடந்த காலங்களில் செய்யவில்லை, எதிர் காலத்திலும் செய்யப் போவதும் இல்லை ( பக்கா சுயநல கும்பல்) . எனவே அவர்களை புறந்தள்ளிவிட்டு உங்களை போன்ற பொதுநல வாதிகள் ஓன்று சேர்ந்து மக்களிடம் சென்று ( ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் ) இந்த ராஜா பக்ச அன் கோ வை எந்த விலை கொடுத்தும் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்யுங்கள். இது மிகவும் இலகுவான சந்தர்பம். இதை தவற விட்டால், எதிர் காலத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது உரிமையும் நமது இருப்பையும், பாதுகாப்பையும் இரத்தம் சிந்தியே பெறவேண்டும்.
    எல்லாம் வல்ல இறைவன் நம்மை இந்த நிலைமையில் இருந்து பாதுகாப்பானாக..! ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.