நிந்தவூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான அவசர கலந்துரையாடல்
(சுலைமான் றாபி)
ஆட்சி மாற்றம் எனும் அறைகூவலுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் சிரேஷ்ட அரசியல் பிரமுககர்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் வருடம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கான அவசர கலந்துரையாடல் இன்று 22.10.2014 ஐக்கிய தேசிய கட்சியின் நிந்தவூர் கிளையில் பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றது.
ஐ.தே.கட்சியின் நிந்தவூர் அமைப்பாளர் எம். றிபாக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், அனோமா கமகே, மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான, கொழும்பு மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.முசம்மில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே, மஞ்சுள பெர்னான்டோ, இம்றான் மௌரூப், கண்டி மாநகர சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார், பொத்துவில் பிரதேச ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எஸ்.எஸ்.பி. மஜீத் ஆகியோர் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினர். இந்நிகழ்வில் உள்ளுர் அரசியல்வாதிகள், அரசியல் அவதானிகள், கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை ஐ.தே.க வின் இந்த அவசரக்கூட்டமானது புதிய அத்தியாயம் ஒன்றினைப் படைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை என மக்கள் பேசிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment