Header Ads



ஞானசாரர் விவாதத்திற்கு செல்வாரா..?

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் நேரடி விவாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்னெடுத்துவரும் பொய் பிராசரங்கள் குறித்தே இவ்  நேரடி விவாதத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

பொதுபல சேனாவின் சங்க சம்மேளன மாநாடு கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றிருந்தார்.

அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானதாகும். முஸ்லிம், சிங்கள மக்கள் நீண்டகாலமாகவே இந்நாட்டில் மிகவும் நெருக்கமான உறவை பேணி வந்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம்களால் பெரும்பான்மையினமான சிங்கள மக்களுக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

ஞானசார தேரரினதும் பொதுபலசேனாவின் செயற்பாடுகளுமே முஸ்லிம், சிங்கள இன உறவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயங்கள் குறித்து நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு விரும்பினால் வாருமாறும், அதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கான ஏற்பாட்டை செய்துகொள்ளலாம் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளதாக அக் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லிம் தலைமைகள் பொதுபல சேனாவுடன் நேரடி விவாதத்திற்கு முன் வராது பின்னிற்கிறது என அவ்வமைப்பின் செயலாளர் பல தடவைகள் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் ஞானசார தேரரை விவாதத்திற்கு அழைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. please stop this smart job.
    this is not time for debate with like this hardliners
    better work is correct our selves.get help from allah.
    may allah guide us.be patient and show our good qualities toour enemei.

    ReplyDelete

Powered by Blogger.