இலங்கை பற்றிய பிரதிபலிப்பு சிதைக்கப்பட, மதவாதக்குழுக்களும், அளுத்கம சம்பவமும் காரணம்
விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதை காட்டுகிறது என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்தமையால் அவர் மீதிருந்த கௌரவம் மிக்க அன்பு, அவரது மனைவி அந்தத்த நாடுகளுக்கு சென்று பேசியமை மற்றும் அப்போதைய வெளிவிவகார செயலாளராக இருந்தவரின் திறமை ஆகிய காரணங்களினாலேயே அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டது.
மேலும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதும் இந்தத் தடை காணப்பட்டது. எனினும் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற ஆனால் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றவர்கள் என நம்பப்படும் மதவாதக்குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் அளுத்கமை, ரதுபஸ்வவ போன்ற சம்பவங்களால் இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்கள் சிதைக்கப்பட்டமையே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரிக்கும் நடவடிக்கையில் நாட்டிலுள்ள அனைவரும் செயல்படாவிடின் கடைசி தடவை ஆட்சியில் நாடு நாசமாகிவிடும்.
ReplyDelete