Header Ads



''உங்களை பிரிவதென்பது, உலகில் மிகவும் கடினமாக இருக்கிறது"

ஈரானின் பெண் ஒருவர் மீது ஆண் ஒருவரை கொலை செய்ததற்காக நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தம்மை கற்பழிக்க முயன்ற வரையே கொலை செய்ததாக அந்த பெண் கூறி வருகிறார்.

தூக்கிலிடப்படுவதற்காக 26 வயதான ரைஹானா ஜப்பரி மேற்கு டெஹ்ரான் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தாக அதிகாரிகள் திங்களன்று அறிவித்திருந்தனர். ஆனால் இணையதளத்தின் ஊடாக தாம் முன்னெடுத்த பிரசாரத்தின் அழுத்தமாக அவர் மீதான மரண தண்டனை 10 தினங்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக செயற்பாட்டா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் மீதான விசாரணை பலவீனம் கொண்டது என்று மனித உரிமை குழுவான சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. ஜப்பரி 2007 ஆம் ஆண்டு ஈரான் உளவுப் பிரிவின் முன்னாள் ஊழியர் மோர்தசா அப்துலலி சர்பன்தி என்பவரை கொலைசெய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அவருக்கு தனது குடும்பத்தினர் அல்லது வழக்கறிஞரை அணுக அனுமதி மறுக்கப்பட ;டுள்ளது. டெஹ்ரான் குற்றவியல் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது.

எனினும் அப்துலலி சர்பன்தியின் பின்புறமாகவே தாம் கத்தியால் குத்தியதாக குறிப்பிடும் ஜப்பரி, வீட்டில் இருந்த வேறு எவரோ அவரை கொன்றதாக சந்தேகிப்ப தாக மன்னிப்புச்சபை கூறுகிறது. இவரது குற்றச்சாட்டு குறித்து எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

ஜப்பரிக்கு ஆதரவாக டுவிட்டரில் தனி பக்கம் ஒன்று திறக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த மரண தண்டனை 10 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொல்லப்பட்ட சர்பன்தியின் குடும்பத்தினரின் ஆலோசனைக்கு அவகாசம் ஏற்பட்டிருப்பதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக தனது மகளின் உடலை பெற்றுக்கொள்ள நிர்வாகத்தினர் தமக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக ஜப்பரி யின் தாய் n'hலே பரவான் குறிப்பிட்டிருந்ததாக கடந்த திங்கட்கிழமை மன்னிப்புச் சபை தவல் அளித்திருந்தது.

இதன்போது ஜப்பரி தனது தாய்க்கு கடைசியாக தொலைபேசி ஊடாகவும் பேசியிருக்கிறார். அதில் அவர், "என்னை மரண தண்டனைக்கு அழைத்துச் செல்ல கார் வண்டி வெளியே காத்து நிற்கிறது. நான் தற்போது கையில் விலங்கிட்ட நிலையிலேயே பேசுகிறேன்" என்று தனது தாயிடம் குறிப்பிட்டுள்ளார். "நான் விடைபெற்றுச் செல்கிறேன். எனது வலிகள் அனைத்தும் நாளைக் காலையுடன் முடிவுக்கு வரும்.

அடுத்த உலகில் சந்திப் போம். நான் மீண்டும் ஒருமுறை உங்களை விட்டுச் செல்லமாட்டேன். உங்களை பிரிவதென்பது உலகில் மிகவும் கடினமாக இருக்கிறது" என்றும் அவர் தெரிவித் திருக்கிறார். இந்நிலையில் ஜப்பரின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட் டிருக்கும் அவரது தாய், அவரது தண்டனை இன்னும் அமுலில் இருப்பதால் தொடர்ந்து கவலையாகவே இருக் கிறது என்றார்.

2 comments:

  1. பொதுவாக அரபுலகின் நீதி ஆண் பெண் இருபாலாரிடையே பாரபட்சமுடையதாகவே இருந்து வருகின்றது. தன்னை மானபங்கம் செய்வதற்கு முயன்ற ஒருவனையே தான் கொல்ல நேர்ந்ததாக கூறப்படுவது உண்மையாக இருப்பின் அந்தப் பெண் குற்றமற்றவள். இதை ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரபுலகச் சட்டம் மறுபரிசீலனை செய்தால் உலக அதிசயம்தான்!

    ReplyDelete
  2. Jesslya Jessly :(

    ஆண் பெண் இருபாலாரிடையே பாராபட்சமாக இருந்து வரக்கூடிய அரபு நீதிதான் சட்டம் ஒரே கணத்தில் எப்படி முன் பின் முரணாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரபுலகுச்சட்டமாக மாறுகின்றது. நான்கு வரிக்குள்ளேயே ஏன் உமக்கு இவ்வளவு குழப்பம். நாட்டில் உலகில் எவ்வள்வோ நடக்கின்றது ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து சற்று வெளிவராமல் உமக்கு வெற்றியீட்ட முடியாது தயவு செய்து சிந்தனையை சிறகடிக்க விடும்.

    ReplyDelete

Powered by Blogger.