Header Ads



மகிந்த அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப ஒன்றுபடுங்கள் - கபீர் ஹாசீம்

-எம்.வை.அமீர்-

நாடு தற்போது அதால பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சிறுபான்மையினர் முதல் பெரும்பான்மையினர் வரை தற்போதைய அரசின் பொறிக்குள் சிக்கித்தவிப்பதாகவும் மக்கள் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசிக்கு ஈடு கொடுக்கமுடியாமல் தவிப்பதாகவும் சிறு பான்மையினர் அரசால் நசுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு அம்பாறை கரையோர பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்மட்டக்குழு (22-10-2014) வருகை தந்திருந்தது. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்த குழுவினர் கடைசியாக சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபாத்தில் ஏற்பாடு செயப்பட்டிருந்த நிகழ்விலும் கலந்து கொண்டனர். ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனைப்பிரதேச பிரச்சாரச் செயலாளர் அஸ்வான் மௌலாவுடைய ஏற்பாட்டில் சட்டத்தரணி ரசாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் பாராளமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம்;

நாட்டு மக்களையும் என் அரசில் உள்ள அமைச்சர்களைக் கூட தனது இரும்புப்பிடிக்குள் வைத்துள்ள மஹிந்த குடும்பம் தங்களது ஆட்சிக்காலத்தை இன்னும் எட்டு வருடங்களுக்கு நீட்டிக் கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் அவ்வாறான சுழல் ஒன்று ஏற்படுமானால் இந்த நாட்டையும் மக்களையும் எதிர்கால சந்ததியையும் மிகவும் பாதிக்கும் என்றும் இவ்வாறன நிலை ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

தாங்கள்  ஐக்கிய தேசியக்கட்சியை புணரமைத்து புது உத்வேகத்துடன் எடுத்துச் செல்வதாகவும் மக்கள் அணியணியாக இணைந்து கொள்வதாகவும் இதற்க்கு உதாரணமாக உவா மாகாணத்தில் ஏற்பட்ட வாக்கு அதிகரிப்பை ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கணிசமான பெரும்பான்மை இன மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் அவசியத்தை உணர்ந்து செயற்படும் இவ்வேளையில் வெற்றியை இன்னும் உறுத்திப்படுத்த தாங்கள் சிறுபான்மை இன மக்களது ஆதரவையும் கோரி நிற்பதாகவும் அதற்காக சிறுபான்மை கட்சிகளுடன் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி வேறுபாடுகளை ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு மகிந்த அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்தார்.

இந்நிகழ்வுகளில் ஐக்கிய தேசிய கட்சியன் தவிசாளரும், பாராளமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே, அவர து பாரியார் பாரளமன்ற உறுப்பினர் அனோமா கமகே, கொழும்பு மாநகரமுதல்வர் ஏ.ஜே.முசம்மில்,கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் மஞ்சுல பெர்னான்டோ மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர், அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அப்துல் மஜீத்  போன்றோருடன் ஐக்கிய தேசியக்கட்சியின்உள்ளூர் தலைவர்களும் பெரும் திரளான மக்களும் பங்கு கொண்டிருந்தனர்.


1 comment:

Powered by Blogger.