Header Ads



கொஸ்லந்தை கண்ணீரில் மிதக்கிறது


பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் நேற்று  ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் மீட்பு பணிகள் இன்றைய தினமும்  இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் எந்தவொரு சடலமும் கண்டெடுக்கப்படவில்லை.   மேலும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்பு பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்றுவருகின்றன.   இந்நிலையில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து எதுவும்  தெரியாததினால்      பிரதேசம்  முழுவதும் சோகமயமாகியுள்ளதுடன்   காணாமல் போனவர்களின் உறவினர்களும்    தவிப்பிலேயே உள்ளனர். 

அந்தவகையில்  தற்போதைய புதிய கணக்கெடுப்புக்களின் பிரகாரம்  மண்சரிவில் சிக்கி 192 பேர்  காணாமல் போயுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும்   குறித்த தோட்டத்தில்  58 குடும்பங்களின்  75 பிள்ளைகள்    பாடசாலைக்கு சென்ற காரணத்தினால்  உயிர் தப்பியுள்ளதாக  பதுளை மாவட்ட செயலாளர் ரோஹன திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.  இநநிலையில்  192 பேரின் கதி என்ன என்பதே அனைவரையும் வாட்டியெடுக்கும் விடயமாகவுள்ளது. 

மேலும் வெளியிடங்களில் ஆயிரம் கணக்கான உறவினர்கள் தனது சொந்தங்களை தேடி மீரியபெத்த பகுதிக்கு வருவதால் மீட்பு பணியில் பாரிய இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தியத்தலாவ பெரகல மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் வெள்ளைகொடிகளை பறக்கவிட்டு மக்கள் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளதோடு பதுளை உட்பட மலையகம் எங்கும் சோகம் நிறைந்து காணப்படுகின்றது.

No comments

Powered by Blogger.