Header Ads



வரவு செலவு திட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள் (விபரம் இணைப்பு)

பசும்பால் விலை அதிகரிப்பு, யோகட் விலை குறைப்பு
பசும்பால் லீற்றருக்கான உத்தரவாத விலை 60 ரூபாவால் அதிகரிப்பு மற்றும் யோகட் ஆகியவற்றின் விலை குறைப்பு

சிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

புலமைப்பரிசில்கள் அதிகரிப்பு
மஹாபொல, 5ஆம் ஆண்டு  புலமைப்பரிசில்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் 4000 ரூபாவினாலும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் 1500 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உயர்மட்ட உத்தியோகஸ்தர்களின் விசேட கொடுப்பனவு அதிகரிப்பு
பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் மற்றும் நீதிச்சேவை ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு ஓய்வூதியத்திட்டம்
வெளிநாடுகளுக்குச் சென்று  வேலை செய்வோருக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் ஓய்வூதியம்
முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மின்சாரக்கட்டணம் 25%ஆல் குறைப்பு
ஹோட்டல் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில்களுக்கான மின்சாரக்கட்டணம் 25 சதவீதத்தால் குறைப்பு.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு  
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 15000, 10000  ரூபாவாக  அதிகரிக்கப்பட்டுள்ளத. அதன்படி அடுத்த வருடத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளமாக 15000 ரூபாவும்,

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளமாக 10000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலை வழங்குவோரினால் வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி 14 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க 1500 மில்லியன் ஒதுக்கீட்டுக்கு முன்மொழிவு.

துண்டுவிழும் தொகை ரூ.512 பில்லியன்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 512 பில்லியன் ரூபாய் துண்டுவிழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2210 பில்லியன் ரூபாவாகும்.

No comments

Powered by Blogger.