Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எப்போது விடிவு..? (படங்கள் இணைப்பு)


(பாறுக் சிகான்)

வட மாகாண முஸ்லீம்கள் தமிழீழ விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதியுடன் 24 வருடங்களாகின்றது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்,உள்ளிட்ட வன்னி பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் 2 மணித்தியாலம் அவகாசம் அளிக்கப்பட்ட பின்னர் விடுதலை புலிகளால் விரட்டப்பட்டனர்.

அன்றில் இருந்து இன்று வரை அம்மக்கள் பலரும் தமது சொந்த மண்ணில் மீளக்குடியமர முடியாமல் கஸ்டப்படுவதை காணமுடிகிறது. இலங்கை அரசாங்கத்தின் பல திட்டங்களில் அவர்கள் உள்வாங்கப்பட்டாலும் தற்போது வரை பலரும் அகதி என்ற பட்டத்துடனே வாழ்கின்றனர். இதற்கு காரணம் பல உள்ள போதிலும் அம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட சமூக தலைவர்களும் அவர்களின் ஒற்றுமையின்மையும் குறிப்பிட்டு சொல்லக் கூடியன.

தற்போது வட பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் அம்மக்கள் படும் துன்பம் சொல்ல முடியாதவை.அடிப்படை வசதிகளான வீடு,மலசலகூடம் கூட இல்லாமல் அவதிப்படுவதை காணமுடிகிறது.

உண்மையான உறுதியான தன்னம்பிக்கையுடன் உள்ள அம்மக்கள் தற்போது தன்னம்பிக்கை இழந்து வருவதை  அவர்களிடம் கதைக்கும் போது தென்படுகிறது.

இதில் இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டத்தில் அவர்களுக்கு காட்டப்படும் ஓரவஞ்சனை யார் அறிவார்.பாருங்கள் இன்று எமது செய்தியாளரின் புகைப்பட கமராவில் சிக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்காக நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீளக்குடியேறிய பொம்மைவெளி முஸ்லீம் மக்கள் குடிதண்ணீருக்காக காத்திருக்கும் அவல நிலை சொல்ல முடியாதவை.

யாழ் மாநகர சபையின் ஒரு மணித்தியாலம் மாத்திரம் விநியோகிக்கப்படும் இக்குடிநீரை நம்பி இங்கு வாழும் 90 க்கும் அதிகமான குடும்பங்கள் இவ்வாறு தான் காத்திருக்கின்றன.இவர்களுக்கு எப்போது விடிவு?



No comments

Powered by Blogger.